பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

30

9. விலங்குப் பிறவி

ஆசையை யறிவின் மேல்நன்
கழுத்தமாய் வைப்ப தோரார்,
காசையே கண்ணு யெண்ணிக்
களங்கமே வாழ்வாய்க் கண்டு
மாசையே பூசிக் கொள்ளும்
மனிதர்கள் வந்திங் ‘காயாள்
தோசையே தெய்வ’ மென்றும்
தொழுவதுார் வழக்கா யிற்றே!

ஊரெல்லாம் பேசும் பேச்சிவ்
வுணவுப்பேச் சொழிந்தா லொட்டிப்
பாரெலாம் கூலி பண்ணும்
பண்ணையாள் வேலைப் பேச்சு!
காருலாம் கூந்தல் மாதர்
கவின்காதல், காட்சிப் பேச்சு!
சிரெலாம் சிந்திப் போச்சிச்
செந்தமிழ் நாடெங் கும்மே!

‘உத்தமக் குறிக்கோ ளொன்றை
உளத்திற்கொண் டொழுகா துள்ளுஞ்
சத்திபாழ் செய்தா ராயின,
சகலமும் பாழா’ மென்று
புத்திபோ தித்தும் பொய்மை
புரியாது புரியி னெந்தக்
கொத்துக்கல் லுள்ள திங்கே
குலச்சாந்தி யளிப்ப தற்கும்!

காரழி வுற்றுக் காய்ந்த
கானலாய்க் கவின ழிந்து
பேரழி வுற்ற துண்மைப்
பேராண்மை! பெருமை பேணும்
சீரழி வுற்ற தின்றிச்
செந்தமிழ் நாடு! சிந்தை
நேரழி வுற்றேர் தம்மை
நிலம்தாங்கும் நெறியொன் றுண்டோ?