பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

31

சிந்தனை செய்கின் றேன்நான்
சீரழி விதுசீ ராக்கப்
‘பொந்தினை விட்டுப் பொல்லாப்
புலிவந்த’ தெனவே பொன்னன்,
—நொந்துகொண் டொதுங்கி நல்லோர்
நுவலுங்கால், — நோ;லாச் சொல்லால்
நிந்தனை செய்கின் ருன்,‘நீ
நெறிகெட்டாய் மாயா’ வென்றே!

நச்சுப்பாம் புக்கென் குச்சில்
நல்வர விலையா னலும்,
பச்சியில் மிச்சம் தொச்சம்
பனம்பண்ணி விடலா மென்றே,
“மச்சினில் மகிழ்தல் விட்டு
மறதியாய் நீமற் றின்றிக்
குச்சிலைக் குறித்து வந்தாய்!
குலைக்காது குந்திங்” கென்றேன்.

நன்றுதீ தென்று ணர்ந்த
நலமான நமது மாட்டுக்
கன்றினை யவிழ்த்து விட்டால்
கடுகிப்புல் கண்டு மேயும்!
என்றுமே இதய மொன்றி
யேற்றத்தை யறியா ஈனப்
பன்றியை யவிழ்த்து விட்டால்
பால்பழ மதுதே டும்மோ?

“கேனனய் விட்டாய், கேள்வி
கேட்பாரில் லாமல் நீயும்!
கானிலோ நாய்க்கே நாளும்
கடுக்காயைக் கொடுக்கும் புள்ளி
மானையே மடக்கற் கெண்ணும்
மரநாய்நீ மாயா! ஆற்றில்
மீனையே பிடித்தால் கூட
மீக்கலாம் பைசா!” என்றன்.