உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

32

“ஓம்பரா சத்தீ யிந்த
ஊர்க்குளத் துதிக்கா அல்லி,
தாம்பரம் லில்லி யென்னத்
தன்வயம் செய்தா ளென்னை!
காம்பிரா முல்லை தூவிக்
கட்டிலி லவளைக் கட்டித்
தீம்பிரா திரவில் கூடித்
திளைத்திடச் செய் நீ” யென்றே,

பாட்டாக்கி யிசைத்தான், ஆயா
படத்தின்முன் கையைக் கூப்பிக்
கூட்டாக்கும் குடும்பப் பெண்ணிக்
குலமகள் பெயரும் கூறி!
‘நாட்டாக்கம் கெடுக்கும் நாயே!
நடடாநீ வெளியி’ லென்றே
வீட்டாக்கம் காத்தற் காய்நான்
வெளியிலே யிழுத்து விட்டேன்.

“மன்னித்து விடுநீ மாயா!
மாமனின் புதல்வி யல்லி!
பொன்னெத்த வண்ண மேனிப்
புலன்கவர் குவளைக் கண்மான்,
தன்னெத்த செல்வ னென்னைத்
தவிர்க்கிறள், ‘மணக்கே’ னென்ற
சின்னத்த னம்,சொல் சிந்தை
சினங்கொளச் செய்த” தென்றன்

“அகமொத்துப் புறமு மொத்தங்
கன்பறி வாற்ற லொத்து
நகமொத்துச் சதையொத் தாங்கு
நல்வாழ்வு நாடும் நங்கை,
இகமொத்துப் பரமு மொத்தே
ஏற்கும்மாப் பிள்ளைக் குள்ளாள்;
முகமொத்தும் சுகமொவ் வாத
மூடன்நீ! போடா!” என்றேன்.