உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

33

பரத்திலே பற்று வைத்தும்
பரமின்ன தெனவோ ராதார்,
தரத்திலே தாழ்ந்தோ ராகித்
தம்மையே விற்றுத் தங்கள்
கரத்திலே காணும் காசைக்
கண்ணிலும் ஒற்றிக் கையைச்
சிரத்திலே வைத்தோ ராகிச்
‘சிவனேசேர்ப் பித்த’ தென்பர்!

காசுக்கும் காமத் திற்கும்
காலத்தை விலையாய்த் தந்து
மாசுக்குள் ளாகி நொந்து
மனங்குன்றி மாள்வார் தம்மை
நேசிக்க வல்லோர் தாம்யார்?
நினைவிலே நிலைக்க வைத்துப்
பூசிக்க வல்லோர் தாம்யார்?
புலவர்கள் தரத்தி லின்றே!

‘இல்லாத னுற்ற இன்ன
லிடையூறு கட்கெல் லாமிக்
கல்லாதப னுற்ற காசே
காரண’ மென்று கண்டு
சொல்லாத நல்லோ னில்லை;
சோற்றுக்கா யுழைக்கச் சொல்லிக்
கொல்லாது கொல்வான், கூடாக்
கூலிக்கா ளாக்கிக் கொண்டே!

பூவிலே வடிவு, வண்ணம்,
பொலிவு.நன் மணமும் போன்று
நாவிலே, நலிவு நீங்க
நல்லது சொல்வான் நல்லோன்;
பாவிலே பரிந்து பண்பைப்
பாவலன் பதிய வைப்பான்;
சாவிலே யன்றிச் சாத்தான்
சாந்தியைக் காட்டா தன்றே?