34
10. சொல்லாற்றல்
வித்தகி யல்லி, வீர
ளேளிர்தம் குலக்கொ ழுந்து,
புத்தகம் கையாய்க் கற்றுப்
பொழுதினைப் போக்கிப் போற்றும்
சித்தக மாமெம் மாய்க்கும்
சிறிதுபோ துதவச் சீராய்
‘மத்தக மதமா வின்முன்
மடப்பிடி’ யெனவந் துற்றள்.
“உள்ளமொன் றுள்ள தோர்ந்தின்
றுரைக்கவொன் றுள்ள தல்லி!
கொள்ளும்நீர் குறையா துள்ள
குளமொன்றில் கூடி வாழும்
ஒள்ளிய வெள்ளாம் பல்தன்
உணர்வினை யுணர்த்துங் காலந்
நள்ளிருள் தனில்செவ் வாம்பல்
நலிப்பது நலமோ?” என்றேன்.
“இருக்கிறீ ரிங்கே யேநீ
ரிசனர் பிள்ளை யாராய்!
விரிக்கிறீர் கடையை ; வீற்று
விற்கிறீர் புரட்சி! வீணுய்ச்
சிரிக்கிறீ ரூரா ரோரார்
செய்தியென் றெண்ணி! யென்பால்
திரிக்கிறீர் கயிற்றை!” யென்றே
தெள்ளியிச் சொல்லைத் தள்ளி,
“புத்தியைப் போற்றிக் கொண்டு
புலன்களைப் புதுக்கிப் பொன்றச்
சத்தியங் கண்டு சாற்றிச்
சகத்தினில் சாந்தி யோங்க,
நித்தமும் நெஞ்சை நீதி
நெறியிலே யியக்கா நின்ற
உத்தம ரில்லா துள்ள
ஊருருப் படமாட் டாது !