பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

35


மனிதனென் றுதித்தால் மன்னும்
மாட்சிமை, பொறுமை, மானம்,
தனதெனும் பிறர தென்னும்
தகைமைசால் தரமும் தாங்கிப்
‘புனிதனென் றுலக மொன்றிப்
புளகித முற்றுப் போற்றும்—
இனிதினு மினிய வாழ்வான்
மீக’மென் றியம்பு கின்றீர்!

‘கதைத்தது போதும், கேட்டுக்
கைத்தது காதும்; காட்டில்
விதைத்ததை யன்றி வேறு
விளைவினை யறுத்தோர் யாவர்?
எதைத்துதி செய்து பெற்றே
மிகத்தில்நா’ மெனநீர் கேட்கப்
பதைத்ததிவ் வூரில் தெய்வப்
பக்தர்க ளிதயம் பாவம்!

‘ஊழ்வினை யென்னும் சொல்லுக்
குரையொன்ப துரைத்திவ் வூரில்
பாழ்வினை பலசெய் வித்துப்
‘பகவானின் செயலிஃ’ தென்றே
தாழ்வினைத் தழைக்க வைத்துத்
தலைதாழ்த்தித் தலைமை யான
வாழ்வினை வணக்கி னேர்தாம்
வைதிக ரென்பீ ரன்றே?

செவ்விய தன்றென் றலும்
செப்புங்கால் செவியில் புக்குக்
கவ்வியே பிடித்து ளத்தைக்
களமாக்கிக் கொள்ளும் சொற்கள்
இவ்வித மாய்மற் றேற்க
எளிதாக இயம்பா நின்ற
தெவ்வித மிதையின் னும்நீர்
இரகசிய மாய்வைத் துள்ளீர் !