பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

36

விரிந்துகொண் டிலங்கா நின்ற
விஞ்ஞான விளக்கம் வேண்டித்
தெரிந்துகொண் டிலங்க வேநான்
தினமும்மைத் தேடி வந்தும்
பரிந்துகொண் டுரைக்கும் பாங்கு
படியாதீ ரெனநன் கும்மைப்
புரிந்துகொண் டுள்ளே” னென்றே
புன்னகை பூத்தாள், பூவை!

“பூண்டு,புல், புளியன், வேம்பு,
புள்ளிமான், பூனை, யானை,
காண்டகு மயில்,பு றக்கள்,
காசினி முழுதும் கட்டி
மாண்டகு விதமா யாளும்
மனிதர்கள் ,— மற்று மின்ன—
தூண்டலில் லாத போது
துலங்குத லில்லை கண்டாய்!

காலைக்கு நன்றி கூறக்
கவிக்குயி லதனைக் கோரிச்
சாலைக்கு நிழலுங் கூட்டிச்
சார்ந்தோர்தம் சலிப்பு மோட்டும்
சோலைக்கொப் பான ஆலும்,
சுயநல அறுகும் சேர்ந்திந்
நூலுக்குள் நுழைந்து நாளை
நுவலும்;நீ நோற்றுக் கொள்ளே!

நல்லது பொல்ல தோர்ந்து
நடுநிலை நவில்வோர் நாவில்
சொல்லது மெல்லி தேனும்
சூதரைக் கொல்வ தாகும்!
புல்லது நெல்லா காது;
பொழுதுபோய்ப் புகுந்த பொல்லா
அல்லதில் பூத்த அல்லி
அரவிந்த மாகா” தென்றேன்.