37
11. மறை திறவு
“முல்லையும் மலர்ந்தால் மூச
முயலாமூ தறிஞ னுண்டோ ?
கொல்லையில் காய்த்துத் தேமா
கோட்பதம் கூர்தல் காணின்
நல்லவன் பறித்துத் தின்ன
நயவாம லிருப்ப துண்டோ ?
‘இல்லை’யென் றியம்ப வுன்ன
லியலுமோ குயிலே!” யென்றேன்,
“மூக்கில்லான் முகரா னயின்
முல்லைதா னென்ன செய்யும் ?
நாக்கில்லான் நவிலா னயின்
நறுமாவின் கதியா தாகும் ?
வாக்கில்லா ளாய்நான் வந்தேன்;
வயணமாய்க் கவிதை செய்யும்
போக்கெல்லாம் பொருத்திக் காட்டிப்
போதிக்க முயல்வீ” ரென்றள்.
“குளமது கொள்ளா துள்ள
கோமளப் பூவே ! ‘கொண்ட
இளமது தீர்ந்து பெண்மை
யெய்திய நாள்நீ யெண்ணி
யுளமது கொண்ட வுண்மை
புரை’யெனக் கேட்டேன்; ‘உள்ளக்
களமது காணக் காட்டின்
கைம்மாறு வேண்டு’ மென்றய் !
காதலைச் செய்வ தற்குக்
கற்பித்துத் தருவோர் தான்யார் ?
சாதலை யுதித்த லேத்தான்
சகத்தினில் கற்பிப் போர்யார் ?
ஒதலுக் குரித்தா யுள்ளம்
உவப்பிக்கும் கவிதை கற்பித்
தீதலுக் கியலா தென்றன்
றியம்பினே னன்றே, நானும் !