உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

38

‘நாவிலே தேன்பெய்’ தென்ன
நாடகப் பாணி யாகப்
பாவிலே பல்வே றன
பண்புகள் படியப் பண்ணிப்
பூவிலே புனையும் மாலை
போலவே கவிதை செய்தற்
காவலே மூல’ மென்றும்
அறிவித்துள் ளேனன் றன்பே!

வானத்தைப் பற்றிப் பாடு;
வையத்தைப் பற்றிப் பாடு;
மானத்தை, மனித வாழ்வின்
மகிழ்ச்சியைப் பற்றிப் பாடு;
ஈனத்தைக் கூட்டித் தோட்டி
எறிவதொத் திலங்கப் பாடு;
ஞானத்தைப் பற்றிப் பாடு,
ஞாலங்கொண் டாடு மாறே!)

களிப்பதற் கெனவே யுள்ள
கவின்மிகு கவிதை யாவும்
துளிப்பதற் கெனவே யுள்ள
தூயவா னெக்கு மாயின்,
அளிப்பதற் கெனவே யுள்ள
அரும்பொரு ளனைத்து மாயா
தொளிப்பதற் கெனவே யுள்ள
துற்றேர்ந்து கொள்வா யல்லீ!

‘இடையில்லை’ யென்னும் சொல்லுக்
கேற்றதுன் னிடையே ‘எய்யும்
படையில்லை’ யென்னும் சொல்லுன்
பார்வையே பகரும்! ‘பார்த்தால்,
கடையில்லை’ யென்னும் சொல்லுன்
கவிதைக ளேற்க, ‘யாதும்
தடையில்லை’ யென்னும் ஞாலம்!
தாராள மாய்ப்பா” டென்றேன்.