39
“எண்ணிய துண்டென்’ நெஞ்சில்:
இரண்டாண்டு கட்கு முன்நான்,
தண்ணிய துறையில் முங்கித்
தனியாளாய்க் குளிக்குங் கால்,தன்
பெண்ணெனப் பரிந்து நொய்யல்
பெருக்கெடுத் தேந்திச் செல்லக்
கண்ணிலிக் கவிஞன் கண்டு
கடுகிப்பாய்ந் தெடுத்துக் காத்தான்.
நங்கையி னிதய மென்னும்
நளினம், நல்வை றைக்கண்
செங்கதிர் முகங்கண் டன்றிச்
சிறுமைதிர்ந் தலரா வாறய்க்
கங்குலும் பகலும் மற்றிக்
கவிஞனே கணவ னென்று
தங்கவைத் துளத்தில் காத்தேன்,
தரணிகா ணத வாறே!
‘கற்றமாப் பிள்ளை’ யென்றும்
‘கெளரவம், காணி, காசோ
டுற்றமாப் பிள்ளை’ யென்றும்
ஒய்வொழி வென்ப தின்றிப்
பெற்றமாக் கடனைத் தீர்க்கப்
பேசித்தா யலுத்தாள்; பேறய்ப்
பற்றமாத் தவம்தான் செய்தும்
பாவலன் பற்ற ன்னன் !
‘கங்குலும் பகலும் வாது,
கள்,காமம், கானு மூரில்
தங்குதல் தவறு பெண்ணே !
தாங்குவேன் வாயிங்’ கென்று
‘மங்குலில் நொய்யல் கூவ
மகிழ்ந்துசெல் கின்றே னின்’றென்
றிங்கிதத் தமிழில் நானும்
இயற்றுவேன் கவிதை” யென்றள்.