பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

40

12. ஏமாற்றம்

இருக்கின்ற இருப்பில் கொஞ்சம்
இனிமையா யிருத்தற் கெண்ணித்
தருக்கொன்ற வுரைத்த என்சொல்
தலைகீழாய்த் திருப்பித் தன்னுள்
சிரிக்கின்ற சிற்பம், நாளைச்
செயலிலும் காட்டி னந்தோ!
உருக்கொன்று மென்ற னுள்ளம்
உடைந்துருக் குலையும் போது!

‘சாக்குரு விக்குத் தான்தான்
சம்பந்தி’ யெனவே சாற்றி,
‘ஈக்கரி தில்லை யெந்த
இடமுமிங் கெனஇ யங்கிப்
போக்கிரித் தனங்க ளெல்லாம்
பொன்னனுக் கூட்டிக் கொண்டே
நாக்கரிப் பனைத்தும் தீர்க்க
நாகப்பன் வந்தா னங்கே!

தவம்செய்து பெற்றெ டுத்த
தந்தையும், தலையில் தாங்கி
நவம்செய்து வளர்த்தும் நல்ல
நாகப்ப னகான், நாறும்
சவம்செய்த வாறே சார்ந்த
சகலர்க்கும் தானும் செய்வித்
தவம்செய்தான், தன்னைத் தானே
யறியாமைக் காட்பட் டன்றே!

கல்லான்க ளுக்குக் கையில்
காசது சேர்ந்தால், கஞ்சி
யில்லான்க ளுக்கெல் லாம்தான்
எசமான னகி, ஏய்க்கும்
பொல்லான்க ளுக்கும், பொய்க்கும்
போசக னகும் போது,
நல்லான்க ளுக்குக் கொல்லும்
நஞ்சாகா திருக்கா னன்றே?