உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

41

கடைக்கிடை வந்து குந்தும்
கயவரைக் கண்டெ ழுந்து,
மடைக்கிடை மீன யல்லி
மறைவளென் றெண்ண, அன்ன
நடைக்கிடை, ‘வறுவல், தோசை
நல்கவா ? வடையா ?’ என்றள்,
விடைக்கிடை ‘வேற்ற ரென்ன
விரைந்தெதிர் வினவா நின்றே !

கதிர்பார்த்துக் காத்த றுத்துக்
களத்திலே நெல்கா ணது,
பதர்பார்த்தார்ப் போலப் பார்த்துப்
பதைபதைப் பவராய்ப் பாவம் !
‘எதிர்பார்த்த வாறில் லாதிங்
கேமாற்றம் நேர்ந்த’ தென்றே ,
புதிர்பார்த்தும் புலப்ப டாத
போக்கிலே புழுங்க லுற்றர்.

கற்றலும் கருத லும்தான்
கைவரப் பெற்றுக் கற்புப்
பற்றிலும் பணியி லும்நற்
பண்புகள் ப்டிந்த பாவை,
முற்றிலும் முறிந்தார் முன்போய்
முனியாது மொழிய, மூடர்
வற்றலாய் முகமும் வாடி
வருத்தாது வருந்திச் சென்றர்.

ஆத்திரம், அருவ ருப்பால்
அகத்தில்சொல் லருவி யாகிப்
‘பீத்தரை ! பிடுங்கல் பீடை !
பெண்பித்துப் பேய்ப்பி றப்பு !
தூத்தரி !’ யென்று காறித்
துப்பினள், தொடர்ந்து தோகை !
நேத்திரம் சிவக்க, நீசர்
நெஞ்சுக நேரில் நின்றே !