52
“கூலிகட் டாது ; கொஞ்சம்
கூட்டுங்க" ளென்றல் பெண்கள்,
‘சேலைகட் டிக்கொண் டிங்கே
செயும்வேலை யிலை’யென் பாரும்
வேலிகட் டிக்கொண் டன்றி
வேளாண்மை செய்யா ராயின்,
தாலிகட் டிக்கொண் டன்றித்
தாரமா காள் பெண்” ணென்றள்.
“‘தாதுங்கள் ளமிழ்தும் தாங்கித்
தரணியில் தயங்கப் பூத்த
மாதுங்க மலர்நீ, யென்னை
மனங்கண்டு மணந்து கொள்ளும்
போதிங்கு காதல் பூக்கப்
புரிவது தவற கா”தென்
றதங்கப் பட்டே னய்,நான்
அணங்கினை யணுக லானேன்.
மேசையைப் ‘பளிங்கிஃ’ தென்ன
மிளிரவே துடைத்து, மேலே
தோசையை முறுக லாக்கித்
‘தும்பைப்பூ’ வெனவைக் கின்றேன்;
ஆசையும், பசியும் ஆட்பட்
டடங்கவே அமர்ந்த ருந்தின்
காசையுங் கேட்கே” னென்றே
கனிவாகச் சிரித்துக் கொண்டே,
“‘தருசிலே நட்டுத் தண்ணிர்
தான்விடாச் செடியாய்க் காய்ந்தேன்;
குரிசிலே! குமணற் கொப்பாய்க்
குவலயத் துள்ளிர் கொள்ளைப்
பரிசிலுக் காய் வந் தேன்;நான்
பாவல’ னெனநீர் பன்னின்,
அரசனய்ந் தறியா தங்கை
அரிசிதந் தனுப்பல் நன்றே?