பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

,
ஆடுங்கால் காலங் கண்டாய்ந்
தாடிடும் மயிலும் ; ஆரப்
பாடுங்கால் பாங்கு பார்த்துப்
பாடிடும் குயிலும் ! பாரில்
தேடுங்கால் தெளிந்து தேடித்
திளைத்திடத் தின்று தீர்க்கக்
கூடுங்கால், குசலம் கூடக்
கூடிட வேண்டு மன்றோ ?

‘சேலம்மாம் பழமி னிப்பின்
சிகரந்தா’ னெனினும், சேரக்
காலம்தான் கழிந்து காயும்
கனிந்திட வேண்டும் ! கண்ணில்
கோலம்தான் கொண்டும் கண்டும்,
‘கொடுப்பது கொள்வ தெ’ன்னும்
சீலம்தான் விடின்‘சீ’ யென்று
சிரிக்காதோ இவ்வூ” ரென்றாள்.

“‘கீச்செ’னக் குரலில் மட்டும்
கிளியன்று ; கிளர்ந்து கேட்கும்
பேச்சிலும் கிளிதான் ; ‘பேதைப்
பெண்மையி னியல்பிஃ’ தென்னும்
ஏச்சிலும் கிளிதான்! மேனி
யெழிலிலும் கிளிதான் ! ஏன் ? கண்
வீச்சிலும் கிளியே தான் நீ !
வென்றனை யெனையின்’ றென்றேன்.

“வென்றியும், தோல்வி யும்தம்
விருப்பமும் வெறுப்பு மாக்கல்
குன்றிய குணத்தி னோரின்
கூற்றெனக் கொள்வ ரான்றோர் !
ஒன்றிய அறிவி னேரோர்ந்
துண்மையை யுணர்த்தற் கன்றி,
என்றுமே தர்க்கம் செய்வ
தில்லை மற்” றென்றா ளல்லி !