54
16. வேண்டுகோள்
காலத்தில் தழைத்துப் பூத்துக்
காய்த்துப்பின் கனியும் சோலை
யாலத்தி யழைத்தி டாதே,
அழகான பறவை யெல்லாம்
கோலத்தைக் குறித்துக் கூவிக்
கூடல்போல், கூலி யாட்கள்
சீலத்தை யிழைத்திச் செல்விச்
செயல்திறம் தேரச் சேர்வார் !
“காலையி லுணவுட் கொண்டு
கல்லாவில் குந்திக் கையில்
நூலையும் கண்கள் நோக்கின்,
நூம்மையும் பெண்கள் நோக்கிச்
சாலையில் குழுமித் தாமாய்ச்
சரமாரி யாவார், சார்ந்து !
வேலையின் நிமித்தம் வந்த
வேற்றூரார் தேனீர்க்” கென்றள்.
“‘பசிக்காது புசித்தால், பாலும்
பழமும்தே னெனினும் , வாய்க்கு
ருசிக்கா’தென் றுரைத்து நான்நி
ரூபித்தும் வைத்தே னல்லீ !
புசிக்காத தெதுவும் தீங்கு
புரியாதின் றெனைநீ போற்றிக்
கசக்காதே ! இதுதா னந்தக்
காதல்நோய் போலு” மென்றேன்.
“உமிழாது, ‘புவியி லெச்சில்
உள்ளதெ’ன் றுரைப்போ ருண்டோ ?
அமிழாது சுரை,நீ ரில்நம்
அகமது விரும்பிற் றேனும் !
கமழாது முல்லை, காலங்
கண்டது மலர்ந்தா லன்றித்
தமிழோதித் தக்கோ ரானேர்
தவறுசெய் தறியா” ரென்றள் .