பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

55


‘தெரியாது தெரிந்தி ருக்கும்
தீஞ்சுவைக் காதல் தேனின்
புரியாத சுவைபோ கித்துப்
புரிந்துகொள் ளும்போ தெய்தப்
பிரியாது நம்மை யின்னும்
பிணைத்திட விலை’யென் பாள்போல்
சிரியாது, முகஞ்சி வந்தாள்,
செய்கையால் சிணுங்கிச் செல்வி !

“அறிவதை யாய்ந்த றிந்தும்,
ஆள்வதை யமைய ஆண்டும்
உறுவதை யோர்ந்து ணர்ந்தும்,
ஒல்லாத தொதுக்கி, யொன்றிப்
பெறுவதைப் பெறுத லிஃதே
பேராண்மை ! பெருமை யெய்தும்
திறவிதைத் தெரிவித் தேனென்
தெய்வமே” யென்றள், தேவி !

அல்வேய்ந்து கொண்டி ருக்கும்
அந்திநள் ளிரவே யாக ;
எல்வேய்ந்து கொண்டி டிருக்கும்
இளங்காலைப் பகலே யாகப்
புல்வேய்ந்து கொண்டி ருக்கும்
புனைவிலாக் கொட்டில் புக்குச்
சொல்வேய்ந்து கொண்டி ருக்கும்
சுந்தரி தொடர்ந்து சொன்னுள்:

“சட்டினிக் கிந்தத் தோசை ;
சாம்பாருக் கந்தத் தோசை !
இட்டிலிக் கேற்ப வுள்ள
தெண்ணெயும், பொடியு மிந்தக்
கொட்டிலை மாடி யாக்கிக்
கொடுக்கவந் துள்ளேன் ; குந்திச்
சட்டென வுண்டால் தான்நீர்
சமர்த்துமாப் பிள்ளை,” யென்றே