பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

56

“தந்திரத் தாலே தன்னில்
தானேயாய் வாழ்வோ னேனும்,
மந்திரத் தாலே வீழ்த்தும்
மாங்கனி யிலையென் மானே !
எந்திரத் தாலே மாற்றும்
இணைப்பெதூ மில்லாக் குச்சுன்
சுந்தரத் தாலே யாங்கொல்
சொகுசான மச்சா யிங்கே ?

அகவாழ்வும், புறவாழ் வும்மற்
றறிவினி லடக்கி வைத்திங்
கிகவாழ்வை யினைத்தி யக்கும்
இலக்கிய மில்லா தின்று
சகவாழ்வே சரிந்து, மக்கள்
சருகாக வாட்டுங் காலம்,
சுகவாழ்வு கனவில் கூடச்
சுயமாகப் பொருந்தா” தென்றேன்.

“நெய்வதை யறிந்து நெய்தால்
நேர்த்தி’யென் பதுவாய் நேர,
உய்வதை யறிந்து, காலம்
ஒருநொடி வீணக் காமல்
செய்வதை யறிந்து செய்தால்
சேராத செல்வ மில்லை !
எய்வதை யறிந்திங் கெய்தி
யிருந்தின்ப முறலாம்” என்றள்.

“நூறுபேர் பசியால் நொந்து
நோயுண்டு மாயும் போதிங்
காறுபேர் அரச போகம்,—
ஆனந்த மாக வாழ்ந்தால்,
மாறுபேர் சூட்டி மக்கள்
மரியாதை கெடுத்து, மாறய்
ஊறுபே ராது செய்தே
உளங்குன்ற வைப்பா” ரென்றேன்.