உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

57

17. காதலோ காதல்

கூட்டமாய்க் குழுமி வந்து
குந்திப்பாட் டாளி மக்கள்,
நாட்டமாய்க் கேட்டு வாங்கி
நசைதீர வுண்டெ ழுந்து
நோட்டுமாய்ப் பணமாய் நீட்டின்
துவல்வதோ ராது, நொந்து
பாட்டிமாய் வதனை வந்து
பரிந்துநான் தீர்த்தேன் பார்த்து !

மரத்தினி லிருந்து தோன்றும்
மலர், பிஞ்சு , காய்கள் மாயாத்
தரத்தினி லிருந்தும், தங்கும்
தன்மையில் தாழ்ந்த தாயின்,
பொருத்தினி லிருந்து திர்ந்து
புவியினில் விழுதல் போன்றென்
உரத்தினி லிருந்த தெல்லாம்
உதிர்தலா யுணர லுற்றேன்.

இச்சியா லின்ன,— பச்சை
இலைநிழல் செய்யும் சாலை ;
கச்சித மாய்த்தென் பாலென்
கடையமைந் திருந்தும் , காலம்
உச்சியை யுறும்போ தீயை
யோட்டுமா றுற்று ணங்கும்
பச்சியைக் காணப் பாவம் ,
பரிதாப மாயி ருக்கும் !

புல்லையும் , ஆலை யும்,பொன்
போன்றுநான் புனைந்து போற்றிச்
சொல்லையும் பொருந்த வைத்துச்
சுவையாகக் கவிதை செய்யும்
எல்லையும் தள்ளிக் கொண்டே
ஏகிற்று காலம் ! இப்போ
தல்லியென் அகத்தில் குந்தி
யாட்கொண்டு விட்ட தாலே !