84
________________
காதொன்று கேட்க நாடும்;
கண்ணொன்று காணற் கோடும்;
மீதொன்றி முல்லைப் பூவை
மேய்ந்திட மூக்குந் தேடும்!
தீதன்றி நலஞ்செய் யாதார்
திசைமாற்றம் செய்வ துண்டு!
போதொன்றிப் புலன்க ளொன்றிப்
புரிவதே தவமா மாலே!
தேடினும், தவம்தொ டங்கல்
தெட்சணா யனமஃ தொன்றே;
நீடினும் நீக்கு, போக்கு,
நெறிமுறை, நியமம் வேண்டும்;
பாடினும் வாரா தந்தப்
பாட்டினுக் கேற்பப் பாங்கா
யாடினும் வாரா தாடி
யதுவரி னதுவ ருங்காண்!
தாங்கியே செய்யு மந்தத்
தவமென்ன கடைச்ச ரக்கா?
வாங்கியே வைத்துக் கொண்டு
வைகுந்த மடைவ தற்கும்!
ஓங்கியுச் சரித்துத் தெய்வ
முளமொன்றித் துதிக்குங் கா'லிப்
பூங்குயில் கூடக் கூவிப்
புளகித்து மயக்கு' மென்பர்!
நீரினால் முளைவேர் விட்டு
நிலம்பற்றி நீண்டு நின்றிவ்
வூரினா லோம்பா துள்ள
வோரறி வுயிர்க ளேனும்,
சீரினா லேற்ற மெய்திச்
செழிப்புட னிருக்க வேநாம்
கோரினால் தெய்வம் கூட்டிக்
கொடுத்திடு மென்ற தாம்புல்!