உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

________________

நிசியாகி நீளும் கூந்தல்,
நிலவென வொளிரும் நெற்றி,
வசியாகி மிளிர்ந்து நீரில்
வயங்கும்நற் கயற்க ணாய்!மெய்ப்
பசியாகிப் பருக வுன்னைப்
பார்த்துநான் பகர்ந்தே னில்லை;
குசியாக வேண்டிச் சொன்ன
குறு நகைக் குறிப்பிஃ தென்றேன்.

‘சேலா'மென் றால்,மற் றச்சேல்
செவ்வரி சேர்த்தா லன்றி,
யேலாமெல் லிளமான் கண்ணி
யிறைஞ்சினா ளெழில்மி குந்த
ஆலாம்நன் மரத்தை யப்புல்
அவம்செய்த தோ?அஃ தன்றேல்
மேலாமவ் வீசன் பாதம்
மேவச்செய் ததுவோ? மேலே,

கொங்குமேல் கோடு தித்துக்
கொடுமுடிக் கொழுநன் கொள்ள,
நுங்குமாய் நுரையா யோடும்
நொய்யலின் குரலும் நொய்யச்
‘சிங்கவே றெனமு ழங்கும்
செந்தமிழ்க் கவிஞ ரேறே!
பொங்கவே மாட்டேன் நான்;நீர்
புகலுக கதையை, யென்றாள்.

கோலுக்குக் குச்சி யென்றும்
குருவாகக் கூடா தென்றவ்
வாலுக்குத் தெரியா தாகி
யாவலால் மேவச் செய்யப்
பாலுக்குங் காவல்; பூனைப்
பசி நீக்குந் தோழ னாய்ப்புல்,
வாலுக்குத் தலைகா ணாது
வாசநெய் பூசிற் றங்கே!