82
ஆலொத்துப் புல்சொல் நம்பி
அருந்தவம் புரிவ தாயின்,
ஞாலத்தில் மனிதன் நானும்
நாடொறும் தவம்செய் கின்றேன்;
காலத்தில் கனிந்த கோவைக்
கனியாமுன் னிதழைக் கொத்தும்
கோலத்துக் கிளியாய்க் கொண்டு
கொள்வதற் கெனைநீ’ யென்றேன்.
நாணாக அமைந்த நல்ல
நகையெலாங் களைந்து, நாடிப்
பூணாக வுமைநான் போற்றிப்
புலனாரப் புனைந்துள் ளேனோ
ராணாகி யெனைக்கொண் டாளற்
காற்றல்சால் தோன்ற லென்றே!
வீணாக வேநீர் பேசி
வேதனை விளைப்பீ’’ ரென்றாள்.
'கலை'யென்று கருதத் தக்க
கவின்மிக்க நவக தைக்கு
விலையொன்று தருவோற் கன்றி
விளம்பநான் விரும்பே' னென்னச்
சிலையொன்றப் புருவம் கோணிச்
சிவந்தகண் ணீராய்ச் சிந்தி.
இலையென்று சொல்வே னல்லேன்
ஏந்தலே யென்றாள், செல்வி!
ஆவின்பா லெனநீ யிவ்வா
றவசர மாய்ப்பொங் காதே;
காவின்பால் காணத் தக்க
கவின்மட வன்ன மே!வுன்
நாவின்பால் சொல்தேன் நன்கு
நசைதீரப் பருகி னன்றிப்
பூவின்பால் வண்டா யுள்ளம்
பொருந்துவ தாகா தன்றோ?