உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

81

23. உபதேசம்

‘பிடிப்புகல் கூடா தெ’ன்றே
பேணுவாள், பிணிக்க லுற்ற
இடுப்பிகல் நகில்கண் டஞ்சி
இணைந்தெழில் துகில்புக் கென்ன,
நடுப்பகல் பொழுதில் கண்முன்
நறுமுல்லைப் பன்ம லர்ந்து
படிப்பிகல் பழுதென் றெண்ணிப்
பையவந் தமர்ந்தாள், பாவை!

பாலுங்கண் டறியாப் பூனை ,
பருகக்காண் பதுபோல் பார்த்தே,
“ஆலுங்கண் டறியும் புல்லும்
அகனமர்ந் திருந்து வாழ்ந்த,—
காலங்கண் டறியா துள்ள
கவின்மிகு கதையை நாமிஞ்
ஞாலங்கண் டறிய நாட்டல்
நலமான செயலா” மென்றள்.

மாட்சியில் மிக்குக் காண்பார்
மனங்கவ ரல்லி யின்நற்
காட்சியில் களித்த லன்றிக்
‘காசினி கமழ வைக்கும்
ஆட்சியில் வந்து குந்தெ’ன்
றழைக்கினு மெனது கண்கள்
மீட்சியில் லாத தாய்மென்
மேலிதில் மேவும் போலும் !

“பாசமாய்ப் பூத்தும் நீரில்,
பருதியின் பயத்தி னலே
வாசமாய்ச் சொல்வ ராது
வாய்மூடி வதியு மல்லி !
நேசமாய் நிலவு காலும்
நிறைமதி தனையும் நீக்கின்,
நீசமாய்த் தேய்ந்து போகும்
நிலைக்கது வந்தே தீரும் !