இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
85
________________
நயமாக நாடி யப்புல்
நவின்றசொல் கூர்ந்து கேட்டுச்
சுயமாக வுன்னி யோர்ந்து
சூழுவ தறியா தவ்வால்,
பயமாகித் தயங்கிற் றேனும்,
பகவானின் பாதம் பற்றும்
வயமாகி, 'வுள்ள தெல்லாம்
வழங்கென' வணங்கிற் றன்றே.
ஒன்றாக,- நானும், நீயும்
உறவுகொண் டுள்ளோ மொப்பி;
இன்றாக, நாளை யாக;-
எதையும்நாம் செய்முன் னாய்ந்து
நன்றாக முடியச் செய்வோம்,
நவையற்ற நந்நாள் கண்டே!
என்றேக லாயிற் றாமன்
றெல்லாங்கற் றறிந்த புல்லே!