உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


24. புல்லின் புத்துரை

பத்தரை மாற்றுச் சூட்டில்
பங்குனி வந்து போய்ப்பின்,
சித்திரை வந்து சேர்ந்து
சீரிள வேனில் செய்ய,
நித்திரை நேராப் பெண்கள்
நெஞ்சம்வை காசிக் கேங்க,
இத்தரை சோனைக் கேங்க
இல்லறம் காணும் காலம்!

மானியாய்ப் பேசிற் றானி:
மணக்கும்வை காசி யக்கா!
சோனையாய்ச் சொரிந்து, சும்மா
சுவர்க்கத்தை நரக மாக்கிப்
பூனையு மடுத்த வீடு
புகமுடி யாது பண்னும்
ஆணியே விலக டீ!'யென்
றதட்டுதிவ் வாடி, யென்றே!

கண்டித்துக் கேட்கத் தக்க
களைக்கொத்து கழன்ற தாலே,
சிண்டித்து வளர்வ தற்காய்ச்
சிறுபயிர்க் குழவ னிட்ட
பிண்டத்தைக் கிண்டி யுண்டு
பிரம்மோப தேசம் பண்ணும்
அண்டத்துப் பொய்ப்புல் லண்டா
தழுதகம் நொந்த தாமால்!

கல்லுக்கங் கருகி ருந்தும்,
கரியநல் லாவின் வாயில்
பல்லுக்குப் பலியாய் மெல்லப்
படுவதோ ராத பைம்புல்
சொல்லுக்காட் பட்டுச் சோகம்
சுணக்கிட நின்ற தாமால்
புல்லுக்கு நேர்ந்த துன்பம்
புரியாது, புகல்கா ணாதே!