87
________________
காலந்தான் காலை மாலை
கண்டுநாள் திங்கள் காட்ட,
ஞாலந்தான் நயந்து, நாடி
நலன்பொலன் நுகர, நைந்த
ஆலுந்தா னகப்புண் ணாறி
அறிவமைந் தடங்கும் போது,
மூலந்தான் கண்டு மீண்டும்
முளைத்துப்புல் முகங்காட் டிற்றே!
புன்னைதான் புகன்ற தாமப்
புல்லினை முதலில் பார்த்தே:
‘‘என்னவோய் புல்லே! நீதான்
இதுகாறும் எங்குற் றாய்?மற்
றுன்னையே எதிர்பார்த் தாலின்
ஒருகண்ணும் புண்,ணிஃ தெல்லாம்
தன்னையே அறிந்தோன் செய்யத்
தகுந்தது தானா? வென்றே!
கொழுந்துவிட் டிலங்கு மிந்தக்
கொன்றையும் கூறிற் றன்றே:
'பழந்தமிழ் நூல்க ளொன்றும்
பயிலாத பசும்புல்' லென்று!
அழுந்திய துயரத் தால்நான்
அரையுயி ராயிங் குள்ளேன்;
'எழுந்துபோ புல்லே என்றன்
றிதயம்நொந் தியம்பிற் றாலே!
கோள்சொல்லிக் குடிகெ டுக்கும்
கொன்றையின் சொல்கேட் கின்றாய்;
நாள்செல்லு மாயின் உண்மை
நன்றாக விளங்கித் தீரும்!
தூள்செல்லும், நெல்தான் நிற்கும்
தூற்றுங்கால்! தொடர்ந்த றிந்த
ஆள்சொல்லும் சொல்லை யேனும்
ஆராய வேண்டா மோநீ?