பக்கம்:அறப்போர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


கலைஞர்கள் பழுத்த மரத்தை நாடும் பறவை களைப்போல வந்தார்கள். புலவர்கள் அழகான பாடல்களைப் பாடித் தந்தார்கள். அந்தப் பாடல்களைத் தன்னுடைய இனிய குரலால் பாடினாள் ஒரு விறலி. பகைவருடைய புறம் பெற்ற வலிமையையுடைய சேர வேந்தனது வீரத்தை இன்னிசையோடு விறலி பாடினாள். அப்படி மறம் பாடிய பாடினி, பாட்டு மகள், ஒரு பரிசு பெற்றாள். பெண்களுக்கு எதைக் கொடுத் தால் உள்ளம் மகிழும் என்பதை நன்கு அறிந்தவர்கள் மன்னர்கள். விறலியர் பாடினால் அவர்களுக்குச் சிறந்த பொன்னணிகளை வழங்குவது அக்கால வழக்கம். இந்த விறலியும் பொன்னிழையைப் பெற்றாள்.

எத்தகைய இழை தெரியுமா? இப்போதெல்லாம் இத்தனை பவுன் என்று நகையின் அளவைக் குறிப்பிடுகிறார்கள். முன்பெல்லாம் அதன் எடையைச் சுட்டிச் சொல்வார்கள். நிறுத்தலளவையிலே கழஞ்சு என்பது ஒன்று. இத்தனை கழஞ்சுப் பொன் என்று சொல்வார்கள். வயவேந்தனுடைய மறம் பாடிய பாடினி பெற்ற சிறப்பான இழை எத்தனை கழஞ்சு இருந்தது? புலவர் கணக்கிட்டுச் சொல்லவில்லை. ஒரு கையைச் செய்தால் சின்னதாகவும் செய்யலாம்; பெரியதாகவும் செய்யலாம்.

50
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/68&oldid=1267436" இலிருந்து மீள்விக்கப்பட்டது