உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௬௦

அகநானூறு

[பாட்டு


எண்ணாத வேற்றுமையற்ற அறிவினை யுடைய, இருவேம் நம் படர் தீர - நம் இருவேமுடைய வருத்தமும் நீங்க, வருவது காணிய வம்மோ - நம் தலைவர் வருதலைக் காண்டற்கு எழுந்து வருவாயாக.

(முடிபு) தோழி! தலைவர் சென்ற தேஎத்து மழை மின்னி நின்றது; நீ நின் நோய்த் தலையையும் அல்லையாய், என் அழியும் இரங்கா நின்றாய்; அங்ஙனம் இரங்கும் நின்னொடு யானும் நம் படர் தீர அவர் வருவது காணிய வம்மோ .

தைஇ, சாஅய், என் அழிபுக்கும் இரங்கும் நின்னொடு என்க.

(வி-ரை.) நோக்கி யன்னவாய்க் கதிர் விட்டு என்க. வணங்குறு கற்பு எனப் பிரித்து, ஏனோர் வணங்குதற்குரிய கற்பு எனலுமாம். நின்னொடு யானும் காண வா எனவும், இருவேம் படர் தீரக் காண வா எனவும் இயையும். வம் - வா என்னும் பொருட்டு. ஓ, அசை. கையது - கையதை எனத் திரிந்து நின்றது. பிடி - பிடிக்கும் இடம். பிடி கையமைந்த என்று பாடம் கொள்ளுதல் பொருந்தும்; பிடித்தற்கு இடம் வைத்து அஃதல்லாத இடம் சுட்டுக் கொள்ளியாக்குதல் இயல்பு.

(மே - ள்.) 1'இளிவே இழவே,' என்னுஞ் சூத்திரத்து 'அணங்குறு கற்பொடு ... நின்னொடியானும்' என்னும் பகுதியை எடுத்துக் காட்டி, இது தலைமகன் பிரிவிற்குத் தோழி படர்கூர்ந்தாள் எனச் சொல்லினமையின் பிறன்கட் டோன்றிய இழவு பற்றி அவலம் பிறந்ததாம் என்பர் பேரா.



74. முல்லை


[தலைமகன் பிரிவின்கண் அழிந்த கிழத்தி, வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது.]


வினைவலம் படுத்த வென்றியொடு மகிழ்சிறந்து
போர்வல் இளையர் தாள்வலம் வாழ்த்தத்
தண்பெயல் பொழிந்த பைதுறு காலைக்
குருதி உருவின் ஒண்செம் மூதாய்

ரு) பெருவழி மருங்கில் சிறுபல வரிப்பப்
பைங்கொடி முல்லை மென்பதப் புதுவீ
வெண்களர் அரிமணல் நன்பல தாஅய்
வண்டுபோ தவிழ்க்கும் தண்கமழ் புறவில்
கருங்கோட் டிரலை காமர் மடப்பிணை

க0) மருண்டமான் நோக்கம் காண்டொறும் நின்னினைந்து
திண்டேர் வலவ கடவெனக் கடைஇ
இன்றே வருவர் ஆன்றிகம் பனியென
வன்புறை இன்சொல் நன்பல பயிற்றும்
நின்வலித் தமைகுவன் மன்னோ அல்கல்

கரு) புன்கண் மாலையொடு பொருந்திக் கொடுங்கோல்


1. தொல், மெய்ப். ௫.