பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்டெழுந்து கிளம்பிச் செல்லுமுன் நான் அவசரம் அவசரமாக உங்களுக்கு ஓர் உறுதி கூறிக் கொள்கிறேன்: நான் சுருக்கமாகவே பேசுவேன்; மணி அடிக்கப்படுவதற்கும் முன்பே பேச்சை முடித்தும் விடுவேன். எனது இந்தச் சிறிய உரையும் கூட நீளமாக இருப்பதாகத் தோன்றினால், தயவு செய்து ஆசனத்திலேயே சற்று நெளிந்து கொடுத்துக் கொண்டிருங்கள்; நான் சீக்கிரமே முடித்து விடுகிறேன் .....

  • * நான் இலக்கியத்தைப் பற்றியும் ஒரு சிறிதே காகிதத்தைப்

பற்றியும் அறிவது கலை மற்றும் தொழில்துறையின் இந்த ஒன்றோடொன்று இணைந்த இரு துறைகளையும் பற்றிப் பேசப் போகிறேன். 5' எனக்கு முன்னால் பேசியவர்களின் பேச்சை ந! ன் பொறாமை யோடு கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் எதைப்பற்றிப் பேசிய போதிலும், அது நிலக்கரி, தானியம், எண்ணெய் அல்லது சர்க்கரை வள்ளி போன்ற எதுவாக இருந்த போதிலும், அவர் கள் புள்ளி விவரங்களையும், சதமான வீதங்களையும் மேற்கோள் காட்டிப் பேசினர்; இதிலிருந்து எவ்வளவு வேலை நடந்துள்ளது என்பதை ஒவ்வொருவரும் கண்டுகொள்ள முடிந்தது. ஆனால் இலக்கியம் என்று எடுத்துக் கொண்டலோ, அது புள்ளி விவரங் களோடும் சத மான வீதங்களோடும் காத தூர உறவை மட்டுமே கொண்ட ஒரு விஷயமேயாகும். மேலும், நான் இங்கு உங்கள் முன் னால், வெறும் கைகளுடனேயே, ஆதரவாக எட்டிப் பிடித்துக் கொள்ளக் கண்ணில் எதுவும் தட்டுப் படாமலே, நிற்கிறேன் ...... "தோழர்களே, நான் இங்கு எங்களது மொத்த உற்பத்தி யளவைப் பற்றி கடந்த ஐந்தாண்டுக் காலத்தின் போது வெளி வந்த புத்தகங்களைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். அதற்கு அவசியமே இல்லை; ஏனெனில் நல்ல புத்தகங்களையெல்லாம் நீங்கள் எல்லோரும் படித்திருக்கிறீர் கள்; மோசமான புத்தகங்களைப் பற்றிச் சொல்லாமல் விட்டு விடுவதே நல்லது, "நாம் இன்னும் குறைவாகத்தான் எழுதுகிறோம், காங்கிரசில் இடம் பெற்றுள்ள புத்தகக் கடைகளில் கதைப் புத்தகங்கள் மிகவும் பரிதாபகரமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதே இதற்குச் சான்று பகரும். இந்தக் காங்கிரசுக்குப் பிரதிநிதிகளாக வந்துள்ள எனது சகோதர-எழுத்தாளர்கள் எவ்வாறு உணர்கி றார்களோ, அது எனக்குத் தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்த வரையில் நான் இந்தப் புத்தகக் கடைகளின் பக்கம் போகா மல் தூர விலகியிருக் கவே முயல்கிறேன், மேலும் அவற்றின்

244

244