அசோகன் அரசாட்சி
53
சாஸனங்களிற் கூறப்படும் ராஜ அதிகாரிகள், |
இவர்களைக் குறிப்பிடும் சாஸனங்கள், |
5. | அந்தமகாமாத்திரர் | முதல் ஸ்தம்பசாஸனம் |
6. | புலிஸர் | 1, 4, 7-ம் ஸ்தம்பசாஸனங்கள் |
7. | விருசபூமிகர் | 12-ம் சா. |
8. | ஸ்திரீ மகாமாத்திரர். | 12-ம் சா. |
8. | தூதர். | 13-ம் சாஸனம். |
8. | யுக்தர். | 3-ம் சா. |
8. | ஆயுக்தர். | இரண்டாம் கலிங்க சா. |
8. | வியோஹாலகர். | முதல் கலிங்க சா.. |
8. | வ்யூதர். | முதல் உபசா, 7 ம் ஸ்தம்பசா |
8. | பதிவேதகர் | 6-ம் சாஸனம். |
இவ்வதிகாரிகளுடைய ஸ்தானங்களையும் வேலைகளையும் பற்றி, சாஸனங்களிலிருந்து மட்டும் நாம் அறிந்து கொள்வன சிலவே. கௌடல்யனுடைய அர்த்தசாஸ்திரத்தையும் அக்காலத்ததான வேறு நூல்களையும் ஆழ்ந்து ஆராய்வோமெனில் இவ்விஷயம் இன்னும் நன்கு விளங்கலாம்,
அசோகன் முடிசூடிய பதினான்காவது பட்டபிஷேக வருஷத்தில் தர்மமகாமாத்திரர் என்ற புது உத்தியோகம் சிருஷ்டிக்கப்பட்டது (ஐந்தாம் ஸ்தம்ப சாஸனம்). இவர்கள் வேலை தர்மத்தைப் பிரசாரம் செய்வதும் காப்பாற்றுவதும் ஜனங்களுக்கு உபகாரம் செய்வதும் தான தர்மங்களை நடத்தி வைப்பதுமே. இவ்வதிகாரிகளுக்குத் தனிப் பிரதேசம் கொடுக்கப்படவில்லையென்று தோன்றுகிறது. எப்போதும் பிரயாணஞ் செய்து, ஸர்வ வியாபகமாயிருந்து, எல்லோருக்கும் நன்மைகளைச் செய்து, அனாதைகளுக்கு அன்னவஸ்திரங்கள் அளித்துக் காப்பாற்றி காட்டுஜாதியாருக்கும் குறவரைப் போல அலைந்து திரிந்து