உள்ளடக்கத்துக்குச் செல்

கால்டுவெல் ஒப்பிலக்கணம்/023-033

விக்கிமூலம் இலிருந்து

கக. 'ஸூத்திரர்’ என்னுஞ் சொல்லின் பண்டைய வழக்கும், பிற்கால வழக்கும்


இன்று 'ஸூத்திரர் ” என்ற பட்டம் இங்கியாவிலுள்ள பெரும்பான்மையான மக்களையும் குறிக்க வழங்குகிறது.[1] கௌரியர் திராவிடர் என்ற வேற்றுமை இதன் வழக்கில் இன்று இல்லை. முதன்முதலில் இது ஸிந்து ஆற்றின் கரையிலுள்ள ஒரு பழங் குடிமக்களின் பெயர் என்று கருதப்பட்டது. லாஸ்ஸென்[2] என்பார் ஸிந்து ஆற்றின் தென் பகுதியில் உள்ள ஸுத்ரோஸ்[3] என்ற நகரப் பெயர் இப்பெயருடன் தொடர்புடையது என்றும், சிறப்பாக வட அரகோஸியாவிலுள்ள[4] ஸூத்ராய்[5] என்ற மக்களின் பெயரே இதன் முதற் சொல் என்றும் கூறுகிறார். அபீரர்[6], நிஷாதர் முதலியவரைப்போலவே இவர்களும் கறுத்த நீண்ட மயிருடைய பண்டைக் குடியினர் என்றும், ஆரியரல்லாதவரானபோதிலும் ஆரியரால் வென்றடக்கப்பட்டு ஆரிய மயமாக்கப்பட்டவர்கள் என்றும் அவர் கூறுகிறார். பிற பழங்குடிகள் பலரும் ஆரியரால் பின்னர் வென்றடிமைப்படுத்தப்பட்டபோது அவர்களெல்லாரும் இவர்களது பெயராகிய "ஸூத்திரர்" என்ற பெயராலேயே அழைக்கப்பட்டனர். கீழ்ப்படுத்தப்படாது எகிர்த்த பழங்குடிகள் தஸ்யூ என்றோ, மிலேச்சர் என்றோ அழைக்கப்பட்டனர்.

ஆராய்ச்சியாளர் பலர் ஸூத்திரர் என்னப்பட்ட அனைவரும் இங்கனம் அடிமைப்படுத்தப்பட்ட ஆரியால்லாதாரே என்கின்றனர். இது முற்றிலும் பொருத்தமுடையதன்று. ஆரியர் முதலிலிருந்தே தம்மிடையே அடிமைகளையும் பணியாளர்களையும் உடையவாாயிருக்கிருக்க வேண்டும். ஸ்லவோனிய அடிமைகள் ஸ்லவோனியாேயாகவும், மாகிய அடிமைகள் மாகியரேயாகவும் இருப்பது போல, ஆரிய அடிமைகளும் முதலில் ஆரியரேயாய் இருங்திருத்தல் வேண்டும். அங்ஙனமின்றேல் பாகதங்களிலும் இன்றைய வட இங்திய மொழிகளிலும் இவ்வாறு பெருவாரியான வட சொற்கள் இருக்க இடமில்லை. -

கிராவிடர் இந்துக்களானது போரில் தோல்வியடைந்ததாலன்று ; அமைதியோடு கூடிய ஆரியக் குடியேற்றத்தாலும், நாகரிகக் கலப்பினாலுமே. தென் இங்தியாவின் மேல் ஆரியர் படையெடுத்தகாகவோ, திராவிடரைக் கீழ்ப்படுத்தியதாகவோ மாபுரை இல்லை; அங்ஙனம் ஏதாவது நடந்திருந்தால் அது மக்கள் மனத்தில் உறுத்திக் கொண்டே இருந்திருக்குமாதலால், மரபுரைகள் இல்லாமலிருக்க வகையுமிராது. இதற்கு நேர்மாறாக, நமக்குக் கிடைத்துள்ள மரபுரைகள் அனைத்தும், ஆரியரைக் குறிக்க இந்நாட்டில் எழுந்த பார்ப்பார் (அதாவது சமய மேற்பார்வையாளர்), ஐயர் (தலைவர்) என்ற பெயர்களும் அவர்களது வெற்றி உடல்வலியால் ஏற்பட்டதன்று, அறிவாலும், ஆட்சித் திறனாலுமே ஏற்பட்டது என்பதைக் காட்டும்.

போர்வீரர்கள் திராவிட நாட்டிற்குள் வங்ததாக ஏதேனும் மரபுரை உண்டானால் அது (சூரிய குலத்திலுதித்தவர்களான) சங்திரகுலத்தைச் சார்ந்த மாபாாத வீரர்களாகிய பாண்டவர் தொடர்பு, பெயரளவிலேனும், மதுரை அாசனாகிய பாண்டியனுக்குண்டானதுதான். இதனாலேயே பாண்டிய அரசர் வடநாட்டுப் போர் வீர(ஷத்திரிய) மரபைச் சேர்ந்தவர் என்று கூறிவிட முடியாது. ஏனெனில், இக்கதையில் இரண்டாம் பாண்டியன் மகளை மணந்தவன் பாண்டியருள் முடிபெறாத இளையவனான அருச்சுனனேயாயினும், அத்தகை யோன்கூட மணமானவுடன் மதுரையில் தங்காது தன் காட்டிற்கே சென்று விட்டமை காண்க! பண்டைத் திராவிட அாசர்களுக்குச் சமயத் தலைவராகவும், அமைச்சர்களாகவும் அமர்ந்த பார்ப்பனர்தாம் அதுகாறும் திராவிட அரசர்களுக்கு வழங்கிய ஆரிய அரசுரிமைப் பட்டங்கள், சின்னங்கள் முதலியவற்றையும், குலமுறையையும் அவர்களுக்கு நாளடைவில் நல்கினர் என்றும்; திராவிட அரசரும் மக்களும் அவற்றை நாளடைவில் உவந்து ஏற்றுக் கொண்டனர் என்றும் எளிதில் ஊகிக்கலாம். பிற்காலங்களில், கோண்டு வனத்திலும் இதே நிலை எய்தியமை காண்க! கோண்டர் களின் கலைவர்கள் ராஜா என்ற பட்டம் பெற்றதுடன் நாளடைவில் பூணூல் பெற்றுப் போர் வீரர்(க்ஷத்திரிய) மரபிற் சேர்க்கப்பட்டனர். தென்னாட்டிலும் முற்காலப் பாளையக்காார் இந்நிலையெய்தப் பெற்றனர்; இக்கால இராமநாதபுரம் புதுக்கோட்டை அரசர் போன்ற திராவிட அரசர்கள் ஆரியர் கூட்டுறவால் ஆரியராக்கப்பட்டு, படிப்படியாக அரசர் குலத்துள் சேர்க்கப்பட்டு அக்குலத்தார்க்குரிய தேவர், வர்மா முதலிய பட்டங்களையும் பெற்றிருக்க வேண்டும். பிற போர் வீர (க்ஷத்திரிய) மரபினரும் நாளடைவில் இதனை ஏற்றுக் கொண்டிருப்பர்.

மனு நூலாரும், பாரத ஆசிரியரும், புராண ஆசிரியர்களும் திராவிடக் குழுவைச் சேர்ந்த மக்கள் எல்லோரையுமே போர்வீரர் மரபில் சேர்த்து க்ஷத்திரியரென வகைப்படுத்திக் கூறுகின்றனர். ஆனால், திராவிடரிடையே வந்து குடியேறி அவர்களிடையே வடநாட்டு வகுப்புப் பிரிவினையையொட்டிச்


1. இதே கருத்தைப் பேராசிரியர் மாக்ஸ்மூலர் " பிரிட்டிஷ் அஸோ ஸியேஷனின் 1847-ஆம் ஆண்டறிக்கை "யில் வெளியிட்டுள்ளார். சாதிப் பிரிவினை கற்பித்த பார்ப்பனர் மட்டும் நாடாளும் அரச குடும்பத்தினர்களொழிந்த மற்றையோர் அனைவரையும் சூத்திார் என்ற பெயருக்கு மேற்பட்ட எப்பெயராலும் அழைத்ததாகத் தெரியவில்லை. இது வியப்பாகவே இருக்கிறது. ஏனெனில் அவர்கள் எளிதாக வேளாளரையும், வணிகரையும் ' வைசியர் ’ என்று அழைத்து, மற்றைக் கீழ்த்தர வகுப்பினரை ஸூத்திார் என அழைத்திருக்க முடியும். அங்ஙனம் அவர்கள் செய்யவில்லை. அஃதேனின், ஆரிய இனத்தைச் சேர்ந்தோரையன்றி ஏனையோரை க்ஷத்திரியரென்றோ, வைசியரென்றோ அழைப்பது அவர்கள் மரபுக்கு மாறானதொன்றாகையால், ஆரியரல்லாத திராவிட மக்களை,- (அவர்கள் எவ்வளவு உயர்தர மக்களேயாயினும்)-ஸூத்ரர்கள் என்றே அழைத்து வந்துள்ளனராதலின் என்க.

மேற்கூறிய நிலைமையினால்தான் வட இந்தியாவில் ஸூத்திரர் என்ற மொழிக்கிருந்த பொருளைவிடத் தென் இங்கியாவில் அதற்கு உயர்வான பொருள் எற்பட்டது. வட இந்தியாவில் ஸூத்திரர் என்போர் அடிமைகள் ; சட்டத்தின் பாதுகாப்புக்குப் புறம்பானவர்கள். அவர்களுக்கு நிலமோ, அரசியல் உரிமையோ கிடையாது. எனவே, அடிமைகளும் தாழ்ந்த வகுப்பினருமே அங்கு ஸூத்திரர் என்னப்பட்டனர். தென் இந்தியாவிலோ எனின், உயர் வகுப்பினரும் நடு வகுப்பினருமே ஸூத்திரர் என்றழைக்கப் பட்டனர். வட நாட்டு ஸூத்திரருக்குச் சரியான தென் நாட்டு மக்களோ ஸூத்திரர் என்றழைக்கப்படாமல், பள்ளர், பறையர் முதலிய பெயர்களாலேயே அழைக்கப்பட்டனர். " ஸூத்திரர் " என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டதாலேயே தென்னாட்டிலுள்ள சிற்றரசர்களும், வீரர்களும், வேளாளரும் ஆரியரால் அடிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றாகி விடமாட்டார்கள். உண்மையில்

பார்ப்பனர் முதலில் அவர்களை ஸூத்திரர் என்றழைத்த போது அப்பெயர் மதிப்பிற்குரியதோர் பட்டப்பெயர் என்றே அவர்களிடம் கூறி அவர்களை ஏமாற்றியிருக்கக் கூடும். இவ் ஏமாற்றும் வெற்றியடைந்ததென்றே கூறலாம். வட இந்தியாவில் ஸூத்திரர் எல்லா வகுப்பிலும் தாழ்ந்த வகுப்பினர்; தென் இந்தியாவிலோ, ஸூத்திார் பார்ப்பனருக்கடுத்தபடியான உயர்ந்த வகுப்பினர் ஆவர். உண்மையில் க்ஷத்திரியர், வைசியர் என்பவற்றை யொப்ப, ஸூத்திரர் என்பதும் திராவிடருள் எவ் வகுப்பினோர்க்கும் பொருத்த மற்ற பெயரேயாம் என்க. திராவிடரை ஆரியப் பாகுபாட்டுடன் தொடர்பு படுத்தாமல் திராவிடர்தம் மபிரற்கேற்ப வேளாளர், நாயக்கர் என்று அவரவர் பழங்குடிப் பெயராலேயே அழைத்தலே சால்புடைத்தாகும்.

  1. அண்மையில் இச்சொல்லின் ஆட்சி தமிழ்மக்களால் ஆங்காங்கு எதிர்க்கப்பட்டு வருகிறது.
  2. Lassen
  3. Sudros
  4. Northern Arachosia
  5. Sudroi
  6. Abhiras