Siva Temple Architecture etc./பெரிய சிவாலயங்களில் சிறு சிவாலயங்கள்
Appearance
பெரிய சிவாலயங்களில் சிறு சிவாலயங்கள்
அநேகப் பெரிய சிவாலயங்களில், கர்ப்பக் கிரஹத்திலுள்ள மூலஸ்தான லிங்கம் தவிர, பிராகராங்களிலும் பல சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப் பட்டு, அவைகளுக்கு சிறு கோயில்களும் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இது பிற்காலத்தில் வந்த வழக்கமாகும். தாங்கள் செய்துகொண்ட பிரார்த்தனையைச் செலுத்தவோ, அல்லது லிங்கப்பிரதிஷ்டையின் புண்ணியத்தைப் பெறவோ, பல சிவபக்தர்கள் பெரிய கோயில்களில் இவ்வாறு சிறு கோயில்கள் கட்டியிருக்கின்றனர் என்பதற்குச் சந்தேகமில்லை. சில இடங்களில் வெளிப் பிராகாரங்களிலுள்ள சிறு சிவலிங்கங்கள் சன்யாசம்பெற்ற சிவபக்தர்களுடைய சமாதிலிங்கங்கள் என்று எண்ணப்படுகின்றன. (இது இன்னும் ஆராய வேண்டிய விஷயம்.)