உள்ளடக்கத்துக்குச் செல்

Siva Temple Architecture etc./அழிக்கப்பட்ட பூர்வீக சிவாலயங்கள்

விக்கிமூலம் இலிருந்து

அழிக்கப்பட்ட பூர்வீக சிவாலயங்கள்

வட இந்தியாவில் மகம்மதியர்களுடைய ஆளுகை வந்த பிறகு பல சிவாலயங்கள் முக்கியமாக ஔரங்கஜீப் காலத்தில் அழிக்கப்பட்டன வென்பது சரித்திரப் பிரசித்திமான சங்கதியாம்; இதற்கு உதாரணமாக அழிக்கப்பட்ட பூர்வீக காசி சிவாலயத்தைக் கூறலாம். தென் இந்தியாவிலும் மாலிக்காபூர் பிரவேசித்த காலத்தில் பல சிவாலயங்கள் இடிக்கப்பட்டன. இதற்கு உதாரணமாக பதின்மூன்றாம் ஆண்டில் இருந்த மதுரை கோயிலிடிக்கப்பட்டதைக் கூறலாம். போர்த்துகேயர் இந்தியாவிற்கு வந்த பிறகு நாகபட்டணம் முதல் சென்னை சாந்தோம் வரையில் கடற்கரை யொரமிருந்த பல சிவாலயங்கள் அவர்களர்ல் அழிக்கப்பட்டது. அவர்கள் சரித்திரத்தின் மூலமாகவே நாம் அறிந்த விஷயம். அவ்வாறு அழிக்கப்பட்ட சிவாலயங்களில் கடற்கரை யோரமிருந்த ஆதி மைலாப்பூர் கோயிலும் ஒன்று என்று நாம் எண்ணுவதற்கு பல ஆதாரங்கள் உள; தற்காலத்திய கபாலீஸ்வரர் கோயில் சுமார் 300 வருடங்களுக்கு முன்புதான் கட்டப்பட்டதாம்.

சில சிவாலயங்கள் முற்றிலும் அழிக்கப்படா விட்டாலும் அவைகளின் சிலபாகங்கள் இடிக்கப்பட்டு வேறு கட்டிடங்களாக உபயோகிக்கப் பட்டிருக்கின்றன. இதற்கு ஒரு உதாரணமாக கங்கைகொண்ட சோழபுரத்து சிவாலயத்தைக் கூறலாம். கோயிலைச் சுற்றி பிராகாரத்தில் கட்டப்பட்டிருந்த மேற்கட்டுடன் கூடிய அழகிய கட்டிடமானது பெரும்பாலும் இடிக்கப்பட்டு, அதிலிருந்த கற்கள் முதலியவைகள் எல்லாம் 1836௵ காவேரியில் கீழ் அணைகட்டுவதற்காக, உபயோகிக்கப்பட்டது; நல்ல காலமாக லார்ட்கர்ஜான் (Lord Curzon) கவர்னர் ஜெனரலாயிருந்த போது அவர் பிறப்பித்த "பூர்வீக கட்டிடங்களை காக்கும் சட்டம்" உண்டான பிறகு, இப்படிப்பட்ட கெடுதிகள் சிவாலயங்களுக்கு ஏற்படவில்லை என்று கூறலாம்.