உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A, ஜேர்கன் தேர்ந்தெடுத்துக்கொள்க. ஒரு கூரிய கத்தி யையோ அல்லது ஆப்பிள் பழ நடுமுள்ளினையோ கொண்டு காரட்டின் உச்சி யில் 2 அல்லது 2.5 செ.மீ. z: ஆழமுள்ள ஒரு துளை யிடுக. உச்சிப் பகு தி பிளந்து போகாமல் கவ னித்துக் கொள்க. இந்தத் து ளை ைய அடர்வுள்ள சருக்கரைக் கரைசலால் நிரப்பு க. இத்துளையில் இறுகப் பொருந்தக்கூடிய தும் ஒன்றிலொன்ருகப் பிணைக்கப் பெற்றதுமான இர ண் டு வைக்கோற் or---, புற் குழல்கள் அல்லது கண்ணுடிக் குழலைச் செருகுக. இந்த அமைப்பினை நீருள்ள சாடியில் சிலமணி நேரம் வைத்திடுக. காரட்டின் உச்சியி லுள்ள துளை ஒழுங்காக இராவிடில் முத்திரை அரக்கின எரியும் மெழுகுவர்த்தியின் சுவாலை யில் வைத்து இளகிய அரக்கினைக் கொண்டு தக்கையினை இறுக்கமாக அடைப்பதும் அவசிய மாகலாம். 6. ஒரு முட்டையாலான சவ்வூடு பரவுதலை அளக்கும் கருவி : சிறு தட்டு போன்ற ஆழமற்ற தட்டொன்றில் சிறிதளவு ஹைட்ரோக்ளோரிக் அமிலம் அல்லது புளிக்காடியைக் (winega) கிட்டத்தட்ட 1 செ. மீ. ஆழத்திற்கு ஊற்றுக. முட்டையின் பெரிய பக்கம் அமிலத்திலிருக்குமாறு வைத் திடுக. அப்பக்கத்தின் ஒடுமட்டிலும் அரிக்கப் பெற்று அதன் உட்புறத்திலுள்ள மெல்லிய சவ்வு மட்டிலும் வெளியில் தெரியும் வரையிலும் இங்ங்னம் வைத்திருத்தல் வேண்டும். முட்டை யின்மீதுள்ள அமிலத்தை நீரால் கழுவுக. ஒரு கூரிய கருவியைக்கொண்டு முட்டையின் மறு புறத்தின் ஒட்டில் ஒரு சிறு துளையிடுக. ஒரு வைக்கோற்புற் குழல் அல்லது கண் ணு டி க் குழலை அத் துளையின் வழியாக முட்டையின் உட் புறம் வரை செருகுக. இக்குழலைச் சுற்றிலுமுள்ள இடைவெளியை சீமைக்காரை (cement) அல் லது முத்திரை அரக்கு இவற்றினைக் கொண்டு அடைத்துவிடுக. இது மிகவும் இறுக்கமாக இருத்தல்வேண்டும். சவ்வூடு பரவுதலை அளக்கும் இந்தக் கருவியை நீருள்ள ஒரு கண்ணுடிப் பாத்திரத்தில் வைத்து ஒரு சிலமணி நேரம் அப்படியே இருக்குமாறு செய்க. 7. வேர்களின்மீது ஈர்ப்பு ஆற்றலின் விளைவு : கிட்டதட்ட 8 செ. மீ. சதுர அளவுள்ள பல மையொற்றுத்தாள் து ண்டு க ளே வெட்டுக. இவற்றை இரண்டு சதுரக் கண்ணுடிகளிடையே வைத்திடுக. ஒவ்வொரு புறத்திலும் கண்ணுடிக் கும் மையொற்றுத்தாளுக்கும் இடையில் பல முள்ளங்கி அல்லது கடுகு விதைகளை வைத்து பட்டைகளால் இறுகப் அவற்றை இரப்பர்ப் அந்த அமைப்பினை நீருடன் உள்ள ஆழமில் லாத சிறு தட்டொன்றில் செங்குத்தாக இருக்கு மாறு நிறுத்துக. விதைகள் முளைவிட்டு சிறு வேர்கள் கிட்டத்தட்ட 15 செ. மீ. நீளம் இருக் கும்பொழுது அந்தச் சதுரங்களே 90° திருப்பி அவற்றை அசையாதிருக்குமாறு வைத்திடுக. இவ்வாறு சதுரங்களைத் திருப்புதலை மீண்டும் மீண்டும் செய்து வேர்களில் அதன் விளைவினை உற்றுநோக்குக. வேர்களின்மீது ஈர்ப்பு ஆற்றலே ஆராய்வதில் வேருெரு முறையும் உண்டு. இதில் பல விதை களே முளைக்கவிட்டு நேராகவுள்ள ஒன்றினைத் தேர்ந்தெடுத்திடுக. இந்த விதையினை ஒரு நீண்ட குண்டு.சியினையோ அல்லது தையலூசி யினையோ கொண்டு துளையிட்டு அதனை ஒரு தக்கையில் பொருத்துக. சிறிதளவு ஈரமான பஞ்சு அல்லது மையொற்றுத் தாளினை ஒரு போத்தலில் வைத்திடுக. தக்கையினையும் நாற் றினையும் (seedling) போத்தலில் வைத்திடுக.

38

37