நடிப்புக் கலை இயற்கையானது
நாடகம் பல உறுப்புகளைக் கொண்டது. கதை, பாத்திரப் படைப்பு, காட்சித் தொகுப்பு, உரையாடல், நடிப்பு, பாடல், வேடப் பொருத்தம், காட்சி ஜோடனை, நாடக அரங்கம், நாடக ரசிகர்கள் இவ்வாறு பல்வேறு பிரிவுகளைக் கொண்ட நாடகத்தில், நடிப்பு ஒரு சிறப்பும் முதன்மையுமான பகுதி.
நடிப்புக் கலை இயற்கையாக எல்லோரிடமும் அமைந்து கிடக்கும் கலை. இந்த நடிப்புக் கலையைத் தேவைப்படும்போது வெளிப்படுத்திக் காட்ட வேண்டும். அப்படிக் காட்டுவதற்குப் பயிற்சி முறைகள் தேவை. நடிப்புக் கலை நமக்கு வராதென்று யாரும் தளர்ச்சி அடைய வேண்டியதில்லை.
பசி எப்படி மனிதனுக்கு இயற்கையாக உண்டாகிறதோ அதே போன்று விளையாட வேண்டும் என்ற உணர்ச்சியும் இயல்பாகவே உண்டாகிறது. இந்த விளையாட்டுகளிலே ஒருவரைப்போல் மற்றொருவர் நடித்துக் காட்டுவது ஒரு அற்புதமான விளையாட்டல்லவா?
எல்லா உயிரினங்களுக்கும் நடிப்பு உண்டு
இந்த விளையாட்டு உணர்ச்சி நம்மைப் போன்ற மனிதர்களுக்கு மட்டுமன்று; எல்லா உயிரினங்களுக்கும் இருக்கிறது. பறவைகளும்,விலங்குகளும் கூட