உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் மறவர்

55

இந்த இரு துருவங்களையும் ஒரே மேடையில் ஏற்றிவிட்டனர். பாரதிதாசன் தலைமையில் கிருபானந்த வாரியார் பேசினார். அவர் பேசும்போது "நான் உங்களுக்கெல்லாம் தமிழை வாரித் தருகிறேன். பாரதிதாசன் என்போன்றார்க்குத் தமிழை வாரித் தருகிறார்" என்று சொல்லிப் பாரதிதாசன் பாடியிருக்கும்

கனியிடை ஏறிய சுளையும்-முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும்-காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும்-தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும்-தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

என்ற பாடலை இசையோடு பாடி அப்பாட்டில் உள்ள நயங்களையும் எடுத்துச் சிறப்பாக விளக்கினார்.

இந்நிகழ்ச்சியைப் பற்றிப் பாரதிதாசன் கூறியது:

"இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், கிருபானந்த வாரியாரே விரும்பிக் கேட்டு என் தலைமையில் வந்து பேசினார். தமிழ் அவருடைய வாயில் கொஞ்சி விளையாடியது. முடிவுரையில் அவருடைய தமிழ்ப் புலமையையும், பேச்சாற்றலையும் நன்கு பாராட்டிப் பேசினேன்.”

குடும்பத்தில் இரவுப் பணிகள் முடிந்து கணவன் மனைவி இருவரும் களைப்பாக உறங்குவது பொதுவான வழக்கம். ஆனால் குடும்பவிளக்கின் தலைவி தங்கம் தன் கணவர் மணவழகரைப் பார்த்து

அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்பதல்லால்
இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்?
என்பதை நாம் நினைத்துப்பார்ப் பதுவு மில்லை.

என்று சொன்னாள். பொதுவாக இரவு நேரத்தில் கணவனும்