பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. காரியம் சூழ்ந்தது 335

அப் பொல்லாத பிள்ளையால் நேர்ந்த புலையாட்டம் இது, ஊரை விட்டு வெளியேரு திருக்கால் இவ் விர சிங்கத்தின் அருகே யார் நெருங்க வல்லார்? உள் நாட்டிலேயே பிளவுபட்டுக் கோளர்கள் சிலர் உளவு சொல்லி இழவு கூட்டுகின்ருர்கள் என் முல் வெளி நாட்டினரை காம் நொந்துகொள்வதால் யாது பயன்? கோழைகளாப் கின்று கூழைக் கும்பிடுகள் போட்டு அயலா ரிடக்கே ஆளைக் காட்டிக் கொடுத்து வயிருர வுண்டு காம் வாழப் பார்க்கின்ருரே! அவர் வாழ்வும் ஒரு வாழ்வாகுமா? உயிரினும் மானமே பெரிது என்று மதித்து, யாருக்கும் கலை வணங்காமல், யாண்டும் அஞ்சாமல், சுகந்தரத்தை நிலை நிறுத்திச், சுத்த விர ராப் கிற்கும் இவ் வுத்தமருக்கு உதவி செய்வார் இங்கே ஒருவ ரும் இல்லையா? பாளைய காரர்கள் எல்லாரும் மோழை எருது கள் போல் முண்டி ஒண்டி யிருக்கிருர்களே பன்றி இவ் வேளை யில் மண்டி எழுந்து கும்பினி அதிகாரிகளோடு மன்ருடி கின்று வேண்டிய உதவியை ஒன்றும் செய்ய வில்லையே! சொந்த காட் டிலே கீர்த்தியை முந்த நாட்டி யிருந்த ஒரு குரனைத் துயரடைய விட்டு எங்க காட்டி லிருந்தோ வந்தவர்க்கு இடங் கொடுத்து இச்சகம் பேசி அச்சமுடன் இதம் புரிந்து கிற்கும் கொச்சைத் கனம் இந்த காட்டில் அன்றி வேறு எங்கேயும் காண முடியாது. ஒற்றுமை இல்லை; உறுதி யில்லை; உணர்வு இல்லை; உரம் இல்லை; ஒழுங் கில்லை; உதவி யில்லை; மானம் இல்லை; மரியாதை இல்லை; ஈன நிலைகளில் இழிந்து தம் வயிறு மட்டும் கிறைந்தால் போதும் என்ற ஆழ்ந்த யோசன பாதும் மின்றி எல்லாரும் தாழ்ந்து கிடக்கின்ருர். அவிச் சுவையே கருதிப் புவிச் சுமைகளாய்ப் பிறருடைய நகைச் சுவைக்கு ஏதுவாய் சுவை யூர்க் து கிற்கின் முர். வீரம் குன்றி, ஈரம் இன்றி, வாரம் ஒன்றி, வஞ்சமும் சூதும் மருவி, கெஞ்சம் இழிந்து கிலே குலைந்து பஞ்சைகளாப் இருக்கார் என்று பாண்டி மண்டலத்திற்கு ஒர் பழி மண்டச் செய்துள்ளார். தேச கேசம் இல்லாதவரை ஈசனும் தேசியான்; நாளடைவில் ருைந்து காசமும் அடைவரே, அவ் அடைவினை ஆராயாமல் மடமை கொண் டிருக்கின்ருரே, இது என்ன இருப்பு? என்ன தேசம்? என்ன நாடு? என்ன ஊர்? என்ன