உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : தலைமுறை இடைவெளி

931

வயதில் மட்டுமல்லாமல் சிந்தனையிலும், பிரச்சினைகளை அணுகும் முறையிலும் கூட, அவருக்கும் தனக்கும் கால் நூற்றாண்டு இடைவெளி இருப்பது போல் தோன்றியது துணைவேந்தருக்கு. தம் இருக்கையிலிருந்து புதிய மரியாதையோடு எழுந்து நின்று,”ரொம்ப நல்லது! உங்களைப் பாராட்டுகிறேன், மிஸ்டர் பிரபு” என்று கைக்குலுக்கி விடை கொடுத்தார் அவர்.

வெளியே காம்பஸில் இரண்டு நாட்களாகக் கேட்டுக் கொண்டிருந்த ‘ஒழிக, டெளன், டெளன்!’ என்ற குரல்கள் ஓய்ந்திருந்தன. அமைதியினிடையே மாமரத்துக் குயில் நிதானமாக அகவுவது கேட்கத் தொடங்கியிருந்தது.

(கலைமகள், தீபாவளி மலர், 1977)