பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன்
65
டங்களிலும் பாண்டியன் படை யானைகள் வேண்டுமளவு தமக்குரிய உணவைக் கொண்டு மேற் சென்றன. வீரர்கள் வழியில் உள்ள ஊரவர் உபசரித்திடும் உணவை உட்கொண்டு செல்வா ராயினர். பாண்டிய நாட்டிலிருந்து இப்படையோடு புறப்பட்டு வந்த பண்ட சாலை வண்டிகளும் படைஞர்க்கு வேண்டுவன தந்தன. இவ்வாறு இவர்கள் சென்று சேரர் படைஞரும் சோழர் படைஞரும் இவர்களை எதிர் பார்த்திருந்த போர்க்களத்தைக் குறுகினார்கள்.
பாண்டியன் நன்மாறன் ஒரு தூதனை யழைத்து, “சேரனும் சோழனும் நம் அடியில் வந்து பணிந்து, நம்மைத் தமிழ் நாட்டுப் பேரரசன் என அங்கீகரிக்கின்றனரா என்று கேட்டு வருக,” எனக் கூறி அனுப்பினன். அவர்கள் அத்தூதனிடம், ”நாங்கள் போர் என்று கேட்ட வளவில் அஞ்சிப் பதுங்கும் அடிமைகளல்லேம்; எங்கள் முன்னோர் பெருமையைப் போற்றவும் எங்கள் நாட்டைப் பாதுகாக்கவும் எங்களில் ஒரு வீரன் உயிரோடு இருக்கும் அளவும் போர் புரிவோம்; படைகளும் படைஞரும் உள்ளவளவும் எவர்க்கும் பணியோம். சமாதானமாகக் கருதி எம்மையும் தம்மோடு ஒப்பாக மதித்து நட்புச் செய்து கொள்ள நும்மரசர் கருதுவாராயின், எமக்குச் சம்மதமே அப்படியன்றி, யாம் அவர்க்குக் கீழ் அடங்கித் திறையளக்கும் நிலைமையை உவப்போடு ஏற்றுக்கொள்வோம் என அவர் எண்ணியது தவறென யாம் தெரிவிக்கின்றோம்,” என்றனர்.
இச்செய்தியைத் தூதன், பாண்டியன் நன்மாறனிடம், வந்து தெரிவித்தான். அவன் அது கேட்டதும்
- 5