உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன்

69

பேரரசன்கீழ் அடங்கி யிருப்பதைக்காட்டிலும் சிறந்த தன்றோ?

பாண்டியன்:--ஒரு பேரரசன் கீழ் அடங்காவிடினும், ஒரு பேரரசனோடு சமாதான உடன்படிக்கை செய்துகொண்டு ஒருவர்க்கொருவர் வேண்டும்போது உதவத் தக்க நிலையில் சகோதர பாவம் கொண்டாடலாமன்றோ? ஒவ்வொரு சிறு நாடும் தனித்தனி தலைமை கொள்வதாயின், அயலவர் எளிதிலே அழித்துவிடக் கூடும் அன்றோ? தமிழ் வழங்கும் நாடு முழுவதும் அவ்வாறு அழிந்துபோகாமல் இருக்கவும் நாட்டுமக்கள் அடிக்கடி போராற் கலங்காதிருக்கவும் என்ன செய்யலாம் என்பதை நீவிர் கருத வேண்டும்.

சேரன்:- தமிழ் மன்னரே, தமிழ் வழங்கும் நாடு முழுவதும் ஒரு தலைமைக்குள் அடங்கி ஒரே முறையான அறநெறியைக் கடைப்பிடித்து வாழ்வது நலமே. ஏன்? இப்பாரத பூமி முழுதும் ஓர் அரசுக்குள் வரக் கூடுமாயின், அதுவும் நலமே. ஆயினும், அது சுலப சாத்தியம் அன்றே! பல வகை வேறுபாடுகள் நமக்குள் உண்டே!

பாண்டியன்:- நாம் அனைவரும் அறநெறி யொன்றாக அரசியல் ஒன்றாக ஓர் அரசு கொள்ளுதல் எவ்வாறு சிரமமாம்? நம்முடைய மொழியும் குலமும் மதமும் தெய்வமும் வாழ்வும் நோக்கங்களும் எல்லாம் ஒன்றேயன்றோ? இவ்வாறு இருக்க, நாம் நம் தமிழ் நாட்டுக்கு ஒரு தலைமையை நாட்ட வியலாது என்று கூறலாகுமா?

சோழன்:-- சிறிது சிரமத்தின்மேல் நிறைவேற்றலாம். இப்பொழுது நாங்கள் இருவரும் நுமது படை-