உள்ளடக்கத்துக்குச் செல்

தம்ம பதம்/அனுபந்தம்-III

விக்கிமூலம் இலிருந்து

அனுபந்தம் மூன்று

ஐந்து தளைகள்

வெட்டிதள்ள வேண்டிய ஐந்து:

1. உடம்பு உண்மையென்னும் எண்ணம் [ஸத்காய திருஷ்டி]

2. சந்தேகம் [வீசிகித்ஸை]

3. பயன் கருதிச் செய்யும் விரதங்கள் [சீல விரதம்]

4. புலன் அநுபவிக்கும் விஷய விருப்பம் [காமம்]

5. கோபம் [ப்ருதிகை]

கைவிட வேண்டிய ஐந்து :

1. உருவம் பெறும் ஆசை [ரூபராகம்]

2. உருவம் பெறாமல் வேறு உலகங்களில் வாழ இச்சித்தல் [அரூப ராகம்]

3. கர்வம் [மானம்]

4. தற்புகழ்ச்சி [ஒளத்தத்தியம்]

5. அறியாமை [அஜ்ஞானம்]

மேலே கூறிய பத்து மனோபாவங்களும், தசஸம்யோ ஜனங்கள் எனப்படும். ஸம்யோஜனங்கள் - விலங்குகள். இந்த மனோபாவங்களால் உலக வாழ்வில் பற்று உண்டாகின்றது.

தேர்ந்து மேலே உயர வேண்டிய ஐந்து (பஞ்ச பலங்கள்):

1. சிரத்தை, 2. சாமர்த்தியம், 3. ஞாபகம், 4.மனனம், 5. ஊகித்தல் அல்லது ஞானம்.

கடக்க வேண்டிய ஐந்து தளைகள் :

1. அவா [ராகம்]

2. வெறுப்பு [துவேஷம் ]

3. மயக்கம் [மோஹம்]

4. கர்வம் [மானம்]

5. பொய்க்காட்சி [திருஷ்டி]

இந்த ஐந்துக்கும் பதிலாக உருவம் [ரூபம்],உணர்ச்சி [வேதனை], நினைப்பு [ஸம்ஜ்ஞை], முற்குறிப்பு [ஸம்ஸ்காரம்], அறிவு, [விஞ்ஞானம்] என்ற ஐந்து ஸ்கந்தங்களையும் கூறலாம்.



எமது நூல்கள்

அண்ணாவின் குட்டிக்கதைகள்

மாவீரன் நெப்போலியன்

ஹைதர் அலி

போதி மாதவன்

தம்மபதம்

மதத்தில் கிழக்கும் மேற்கும்

தமிழன் இதயம்

மலரும் மாலையும்

கவிமணியின் உரைமணிகள்

அறிவுரைக் கொத்து

சிறுவர்க்கான செந்தமிழ்

நீங்களும் கவிஞர் ஆகலாம்

வள்ளலார் மணிமொழிகள்

பொது அறிவுக்களஞ்சியம்

விநோத ரச மஞ்சரி

கம்பனின் சிற்றிலக்கியங்கள்

பகுத்தறிவுச் சிரகம் பெரியார்

திருமுருகாற்றுப்படை

தமிழ் விடு துாது

மூவருலா

குறுந்தொகை

வளையாபதி

குண்டலகேசி

பாஞ்சாலி சபதம்

குயில்பாட்டு

அழகின் சிரிப்பு

முல்லை நிலையம்
9. பாரதி நகர் முதல் தெரு
தி. நகர், சென்னை-600 017.

"https://ta.wikisource.org/w/index.php?title=தம்ம_பதம்/அனுபந்தம்-III&oldid=1381730" இலிருந்து மீள்விக்கப்பட்டது