தம்ம பதம்/அனுபந்தம்-II

விக்கிமூலம் இலிருந்து

அனுபந்தம் இரண்டு

முப்பத்தாறு நதிகள் (ஆசைகள்)

மனிதனுக்குரிய பொறிகள் மெய், வாய், கண், மூக்கு, செவி, மனம் ஆகிய ஆறு; இந்த ஆறு பொறிகளும் ஆறு வாயில்கள். இவை வெளியேயுள்ள பொருள்களின் தோற்றமான உருவத்தை (ரூபம்) அகத்திலே உணரும் குணத்தையும் (நாமம்) அறிய உதவுகின்றன. இந்த ஆறு பொறிகளும் தீண்டுதல், சுவை, உருவம், மணம், கேள்வி, நினைப்பு ஆகிய ‘ஷடாயதனங்கள்’ என்ற ஆறு புலன்களின் வழியே செயற்படும்போது, ஆசைகள் ஏற்படுகின்றன. கண் இனிய உருவத்தைக் காண விரும்புவது போலவும், மனம் இனிய கருத்துக்களை எண்ண விரும்புவது போலவும், ஒவ்வொரு பொறியும் ஒர் ஆசையுள்ளது. ஒவ்வோர் ஆசையும் மூன்று

பிரிவானது; வெறும் புலன் இன்பத்தை விரும்புவது, அழியாமல் நித்தியமாக இருக்க விரும்புவது, அநித்தியமாக இருக்க விரும்புவது. எனவே பொறிகளின் ஆசைகள் 6 x 3 = 18; இவை போலவே ஆறு புலன்களின் ஆசைகளும் 6 x 3 = 18 ஆக மொத்தம் 36 ஆசைகள் என்று விசுத்தி மார்க்கம் கூறும்.

இறந்த கால ஆசைகள் 36, நிகழ் கால ஆசைகள் 36, எதிர் கால ஆசைகள் 36 என்று 108 ஆசைகளும் கணக்கிடப்படும். இவைகளின் மூலாதாரமான ஆசைகள் தீண்டுதல், சுவை, உருவம் முதலிய ஆறுதான். இந்த ஆறையும் மேலும் , சுருக்கிப் புலன் இன்பம், நித்திய வாழ்வு, அநித்திய வாழ்வு ஆகிய மூன்றையும் பற்றிய மூன்றே ஆசைகளாகக் குறிப்பிடுவது உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=தம்ம_பதம்/அனுபந்தம்-II&oldid=1381720" இலிருந்து மீள்விக்கப்பட்டது