நல்ல தோழிதான்/சுற்றுலாப் போன சொக்கய்யா
சுற்றுலாப் போன சொக்கய்யா
சொக்கய்யா ஒரு மட்டும் ஊரை விட்டுக் கிளம்புவது என்று தீர்மானித்து விட்டார். 'ஸேரி, கொஞ்சம் மாறுதலாத்தான் இருக்கட்டுமே இப்படிப் போயி அஞ்சாறு இடங்களைப் பார்த்திட்டு வரலாமேன்னுதான் என்று அவர் காரணத்தையும் ஒலி பரப்பலானார். சொக்கய்யாவைப் பொறுத்தமட்டில்,இது லேசான விஷயம் அல்ல. அவர் எடுத்தது 'மகத்தான முடிவு' ஆகும்.
சொக்கு, சொக்கய்யா என்று சிவபுரத்தினரால் குறிப்பிடப்பட்டு வந்த சொக்கங்யாப் பிள்ளைக்கு சமீபத்தில்தான் ஐம்பது வயது நிரம்பியது. 'ஐம்பதைக் கடந்து ஐம்பத்தொன்றாவது வயசில் காலெடுத்து வைத்த விசேஷத்தைக் கொண்டாடுவதற்காகவும் அவர் உள்ளம் இந்த மாபெரும் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கக் கூடும்.
அவருக்கு ஐம்பது வயது ஆகிவிட்ட போதிலும், அவர் நாலு இடங்களுக்கும் போய் வந்து அனுபவம் பெற்றவர் அல்லர் போக வேண்டிய அவசியம் எதுவும் ஏற்பட்டதில்லை என்பதல்ல, 'எதுக்காகங்துேன் வெளியூர் போய் வரணும்?' என்றுதான் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். வீட்டை விட்டு வெளியே கிளம் புவதே அவருக்குப் பிடிக்காத விஷயம் ஆகும்.
எத்தனையோ பேர் என்னனென்னவோ சொல்லி அவரைப் பரிகசித்துப் பார்த்தார்கள். குற்றாலத்துக்குப் போம். கன்னியாகுமரியைப் பாரும்! அங்கே போய் வாருங்கள். இங்கே போனால் என்ன என்று அவ்வப் போது அவரை சீண்டினார்கள்.
அவர் வீட்டுத் திண்ணையில் "வட்டச் சம்மணம் போட்டு" பிள்ளையார் மாதிரி உட்கார்ந்தபடி அலடசிய மாகச் சிரிப்பார். வாயில் அடக்கி வைத்திருக்கும் வெற்றிலை எச்சிலை சளப்பென்று துப்பிவிட்டு, 'அஹஹ, போறவங்க எங்கே வேணும்னாலும் போய்ப் பாருங்களேன். எனக்கு எந்த இடத்தையும் பார்த்து ஆக வேண்டியது எதுவுமில்லை' என்பார்.
'ஐயா சொக்கு, நீ எங்கே போனாலும் போகா விட்டாலும், மதுரையை போய் பார்த்திட்டு வந்திரு. மதுரை எப்படியாப்பட்ட ஊரு மதுரை பாராதவன் கழுதையின்னே பெரியவங்க சொல்வி வச்சிருக்காங்க” என்று மீனாச்சி ஆச்சி அவரிடம் அடிக்கடி சொல்வது உண்டு.
"ஆச்சி, மதுரை பெரிய ஊரா, அழகான ஊரா இருக்கலாம். ஆனா அதைவிடப் பெரிய ஊருக இல்லைன்னு சொல்லமுடியாது, அப்படி இருக்கையிலே, மதுரையைப் பார்த்தால் தான் சன்ம சபால்யம் அடையும்கிற மாதிரிப் பேசுவது சரியில்லை. அதனாலே மதுரை பாராதவன் கழுதை ன்பதும் சரியான பேச்சு இல்லை" என்று சொக்கய்யா சொல்வார்.
அத்துடன் பேச்சை விட்டுவிட மாட்டார். "நம்ம வங்களே கருத்துள்ள பல வசனங்களையும் சொல்லடைவுகளையும் அர்த்தம் இல்லாததா ஆக்கிப் போட்டாங்க, அறப்படிச்ச மூஞ்சூறு காடிப் பானையிலே விழும். இப்படி ஒரு பழமொழி சொல்லுவாங்க. மூஞ்சூறுக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம்? ஆறப் பிடிச்ச முன் சோறு காடிப்பானையில் விழுகிறதுதான் சரியான வசனம் சோறு வடிக்கையிலே இறுகப் பிடிக்கிறபோது முதல் பருக்கை எப்படியும் கஞ்சித் தண்ணியோடு விழத்தான் செய்யும்; அதைத்தான் இது குறிக்கிறது. அதே கதைதான் இந்த மதுரை பழமொழிக்கும். மறதி பாராதவன் கழுதை என்பதுதான் சரி, எங்கேயாவது புறப்படுகிறபோது, அல்லது ஏதாவது காரியம் செய்யத் திட்டமிடுகிறபோது. எல்லாம் சரியாக இருக்குதா, எதையாவது அசந்து மறந்து விட்டுவிட்டோமா என்று நினைச்சுப் பார்க்கனும், அதுதான் மறதி பார்த்தல். அப்படி நினைச்சுப் பார்க்காமல், எல்லாம் சரியாக இருக்கும்னு தெம்பிலே போயிட்டு, அப்புறம் அது மறந்து போச்சே - இது மறந்து போச்சேயின்னு தலையைச் சொறிஞ்சபடி முழிச்சுக்கிட்டு நிற்பானே அவன் சரியான கழுதை இன்னு இதுக்கு அர்த்தம்" என்று "லெக்சர் அடிப்பார்". அவர் சுபாவம் அது.
ஒரு அம்மாள் அவரிடம் பேச்சோடு பேச்சாகச் சொன்னாள் "ஒரே ஊரில் இருக்கிறதை விட, கோயில் குளம், புண்ணிய தீர்த்தம் புது இடங்கள்னு போயிட்டு வர்றதுதான் நல்லது. அதுக்காகத்தானே மலை மேலேயும், கடலுக்கிட்டேயும் கோயில்களை அமைச்சிருக்காங்க. நான் எல்லா இடங்களையும் பார்த்தாச்சு. இன்னும் ரெண்டு இடம் பாக்கி இருக்கு. மானூர் கோயிலையும் மருதூர் அணையையும் பார்க்கலே" அது களையும் சாகுறதுக்குள்ளே பாத்திரனும், செத்ததும் கடவுள், மருதுர் அணையும் மானூர் அம்பலமும் கண்டாயான்னு கேட்பாராம்.
சொக்கய்யா அட்டகாசமாகச் சிரித்தார். "மானூர் அம்பலமும் மருதூர் அணையும்தான் ரொம்ப அற்புத மானவையின்னு கடவுள் நெனச்சுக்கிட்டிருந்தா அவரு ரொம்பப் பத்தாம் பசலிச் சாமியாத்தான் இருப்பாரு. நாட்டிலே உலகத்திலே என்னென்ன அற்புதமான கட்டிட வேலைப்பாடுகள், அணைக்கட்டுகள் எல்லாம் உண்டாகியிருக்கு இப்ப! நீ போயி மானூரையும் மருதூரையும் பெருசாச் சொல்லுறியே!’ என்று பரிகசித்தார்.
“ஒருத்தன் எல்லாவற்றையுமே பார்த்துவிட முடியாது. மேலும் புதுசு புதுசாக் கண்டு மனசை விசாலப்படுத்துறதுக்கு ஊர் ஊரா ஓடிக்கிட்டே இருக்கனும்கிறதையும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான், உருண்டு உருண்டு கொண்டே இருக்கிற கல்லில் பாசி ஒட்டாது. வெளியூர் எங்கும் போகாமலே, இங்கே உட்கார்ந்து எதிரே இருக்கிற குப்பைத் தொட்டியையும், அங்கே வந்து காலைக் கிளப்பி ஈரப்படுத்திவிட்டு ஓடுகிற நாயையும் பார்த்துக்கிட்டே நான் எத்தனையோ விஷயங்களை உணர முடிகிறது. மேலத் தெருவிலிருந்து கீழத் தெருவுக்கு மெதுவாக நடந்தாலே, ஒரு பிரயாண அனுபவங்களை என்னாலே பெறமுடியுது. பின்னே என்ன?” என்பார்.
“அகராதி புடிச்ச அண்ணாவி?” ‘தலைக்கணம்’ ‘ஹெட் வெயிட்!’ என்று மற்றவர்கள் சொக்கய்யாவைப் பற்றிக் குறிப்பிடுவார்கள். ‘கிணற்றுத் தவளை’ என்றும் சொல்வார்கள்.
பொதுவாகவே, சிவபுரத்தார்கள் ஊர் சுற்றுவதில் அவா உடைய உல்லாசப் பிரியர்களாக வளர்ந்ததில்லை. ரொம்பகாலம் வரை ‘மணியாச்சிக்கு வடக்கே’ திக்கு திசை தெரியாதவர்களே அவ்வூரில் அதிகமாக இருந்தார்கள், அப்புறம் மதுரை வரை போய் வந்த பெருமை. பெற்றோர்கள் அநேக புள்ளிகள். இளந்தலைமுறையினரில் சிலர் சென்னைக்குப் போய் வந்த சிறப்பை அடைந்தார்கள்.
பஸ் போக்குவரத்து அதிகமாகவும் சர்வ சாதாரணமாகவும் ஆகியுள்ள தற்காலத்தில், ஊரில் இருப்பதை
கெளரவக் குறைச்சலாகவும் ‘போர் அடிக்கும்’ விஷயமாகவும் கருதுகிறவர்கள் சிவபுரத்திலும் அதிகரித்துவிட்டார்கள். நினைத்த உடனேயே சட்டையைப் போட்டுக் கொண்டு, பஸ்ஸில் ஏறி டவுணுக்கோ ஜங்ஷனுக்கோ போய்விட வேண்டியதுதான்.
வேலை இருக்கிறதோ இல்லையோ, தினசரி சிவபுரம் கிராமத்திலிருந்து டவுண் அல்லது ஜங்ஷனுக்குப் போய் வருகிறவர்களின் எண்ணிக்கை கணிசமாகவே இருக்கும். “பொழுது போகலே இப்படி டவுனுக்குப் போயி போத்தி ஓட்டலில் காப்பி சாப்பிட்டுட்டு, அங்கே இங்கே நின்று போட்டு வந்தால் தனி உற்சாகம் ஏற்படுது. ‘ஜங்ஷன் போனேன். ராஜ் கபேயில் டிபன் பண்ணிட்டு, ஒரு படம் பார்த்தேன்’ என்று பெருமை பேசும் ‘ஜம்பம் ஜான்கள்’ ஒன்றிருவர் அல்லர், நகரங்களை ஒட்டி இருக்கிற கிராமங்களில் சகஜமாகக் காணப்படுகிற இந்த ரகப்பிரகிருதிகள் சிவபுரத்தி லும் இருந்ததில் வியப்பு இல்லைதான்.
அவர்கள் மத்தியில் ‘எதுக்காகங்ஙேன் வெளியூர் போகனும்?’ என்று கேட்டுக் கொண்டு ஊரை விட்டு அசையாமல் இருந்த சொக்கய்யாதான் காலத்தோடு ஒட்டி வராத அபூர்வ ஆசாமியாகத் தென்பட்டார்.
அவர் உற்றார் உறவினர் விட்டுக் கல்யாணம், கருமாதி என்று சொல்லியும் சிவபுரத்தை விட்டு வெளியேறுவதில்லை. “எனக்கு வீட்டுச் சவுகரியம் வேறு எங்கேயும் கிடைக்காது. வேறே இடத்திலே ராத் தங்குவது எனக்கு ஒத்துக்கிடாது. அதிகாலையிலே எழுந்து குளித்து விட்டு, பூசை பண்ண வெளி இடங்களில் போதுமான வசதி இருப்பதில்லை. அதனாலேயே நான் வெளியூர் விசேஷங்களுக்குப் போவதில்லை. வே, நான் செத்தால் வெளியூர்காரன் எவனும்
வர வேண்டாம். சிவபுரத்திலே இருக்கிறவங்களே என் கட்டையைத் தூக்கிட்டு ஆத்தங்கரைக்குக் கொண்டு போய் எரிச்சுப் போடுவாங்க. பின்னே என்ன!" என்பார்.
"இவரு கிட்டே யாரு பேசுவா?" என்று மற்றவர் களும் சும்மா இருந்துவிட்டார்கள்.
இப்பேர்ப்பட்ட 'கல்யாண குணங்கள்' உடைய சொக்கய்யா திடீரென்று நான் இப்படி மதுரை, திருச்சி, மதராஸ் எல்லாம் போய் வரப்போறேன்’ என்று அறிவித்தால் அது லேசுப்பட்ட விஷயமா என்ன? சிவபுரம் வீடு தோறும் பேச்சுக்கும் சர்ச்சைக்கும் இலக்காகும் பரபரப்புச் செய்தி இல்லையா!
"என்ன அண்ணாச்சி, வெளியூர் போகப் போகறீங்ளா? என்று விசாரித்த தம்பியா பிள்ளைகளும், 'தாத்தா மெட்ராஸ் பார்க்கப் போறேளா? எனக் கேட்ட பேரப் பிள்ளைகளும், 'மாமா டூர் கிளம்பியாச்சு போலிருக்கு?' என்று பேச்சுக் கொடுத்த மருகன்களும் மருமகள்களும், 'பெரியப்பா, என்னைக்குப் புறப்படுநீங்க?? சித்தப்பா, எங்க எல்லாம் போக எண்ணியிருக்கீங்க? என அக்கறையாக வினவிய மகன்களும் அவ்வூரில் நிறையவே இருந்தார்கள்". தங்கள்து பிரயாண அனுபவங்களையும், மேலான ஆலோசனைகளையும் எத்தனையோ பேர் அவரிடம் சொன்னார்கள்.
இதெல்லாம் சோக்கய்யாவுக்கு சந்தோஷத்தோடு எரிச்சலும் தந்தன. "சவத்துப் பயலுக, இருக்கிறவனை இருக்கவும் விடமாட்டாங்க, சாகிறவனை சாகவும் விட மாட்டாங்க. எவனும் எக்கேடும் கெடுதானுன்னு விட்டுப் போட்டு அவனவன் வேலையைப் பார்க்க லாமே, என்கிறதே இவனுகளுக்கு இல்லை பாருமேன்?" என்று அவர் முணமுணத்தார். அதற்காக மற்றவர்கள் தங்கள் இயல்புகளை விட்டு விடுவார்களா? அவரிடம் வந்து, பஸ்ஸில் போவதன் செளகரியம் பற்றி வர்ணித்தார்கள் சிலர். 'பஸ்களை நம்பப்படாது; நடுராத்திரியிலே திசை தெரியாத இடத்திலே உயர் வேடிச்சிட்டுதுன்னு சொன்னா, அங்கேயே காத்துக் கிடக்கப் போட்டிருவான், ரயிலுதான் ரொம்ப செளகரியம். காலை, கையை நீட்ட எழுந்து நிற்க, நடக்க... நினைச்சா, படுத்துக்கிடவும் செய்யலாமே', என்ற தன்மையில் விவரித்தார்கள் அநேகர்.
அவர்களிடம் எரிந்து விழாமலும் உள்ளக் கடு கடுப்பைக் காட்டிக் கொள்ளாமலும் இருப்பதற்கு அவருக்கு மிகுந்த பொறுமை தேவைப்பட்டது.
ஒரு மாதிரியாக ஒருநாள் சொக்கய்யா ஊரை விட்டுக் கிளம்பிப் போனார். என்று திரும்புவேன் என்று யாரிடமும் சொல்லவில்லை.
"ஆசாமி அவுட்! இன்னும் பத்துப் பதினைஞ்சு நாளைக்கு ஆளை பார்க்க முடியாது" என்று சிவபுரம் வாசிகள் பேசிக்கொண்டார்கள். 'அவருக்கென்ன! சுகவாசி. இரண்டு மூணு வாரம் கேம்ப் போட்டாலும் போட்டிருவாரு' என்றும் சிலர் சொன்னார்கள்.
அவர்கள் சொக்கய்யாவை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை தான். புறப்பட்டுப் போன மூன்றாம் நாளே சொக்கய்யா ஊரில் தமது வீட்டுத் திண்ணை மீது வட்டச் சம்மணம் போட்டு உட்கார்ந்து, வெற்றிலைச் செல்வத்தை பக்கத்தில் திறந்து வைத்து வெற்றிலையை ரசித்துப் போட்டுக் கொண்டிருந்தார். இந்த சகஜமான காட்சி இப்போது பார்த்தவர்களுக்கு ஆச்சரியமாகப்பட்டது.
- என்ன அண்ணாச்சி, எங்கேயும் போகவே இல்லையா? என்று கேட்டார்கள்.
"போகாம என்ன! மதுரை, மெட்ராஸ் எல்லாம் போனேனே?" என்றார் அவர்.
"பின்னே அதுக்குள்ளே திரும்பி வந்துட்டிகளே?" என்று மேலும் ஆச்சரியப்பட்டார்கள் அவர்கள்.
"போனேன். வந்தேன்" என்றார் சொக்கய்யா. வெற்றிலைச் சாற்றை உமிழ்த்துவிட்டு வழக்கமான தொனியில் அறிவித்தார் :
"முதல்லே மது ரக்குத்தான் போனேன். வே, மதுரை முன்னாலே. அழகான ஊரா இருந்திருக்கலாம். இப்போ அங்கே அழகு எதையும் என்னாலே காணமுடியலே எங்கு பார்த்தாலும் லாட்ஜுகள், கட்டிடங்கள், கடைகள், ஜன நெருக்கடி ஒரே கூட்டம். நான் முக்கியமான தெருக்களில் எல்லாம் நடந்து பார்த்தேன். ஜனப்பெருக்கமும் அசுத்தமும் போட்டி போட்டு வளர்கிற ஒரு நகரமாகத்தான் அதுவும் இருந்தது கோயிலுக்கும் போனேன். என் மனசுக்கு எதுவுமே பிடிக்கலே போம். உடனே திருச்சிக்கு ரயிலேறினேன. அவன் தம்பி அங்கதன் என்பார்களே, அதுமாதிரித் தான் இருக்கு இதுவும். மதுரையிலாவது வீதி அமைப்புகளில் ஒரு ஒழுங்கு முறை இருக்கு. திருச்சியிலே ஒரு எழவுமே இல்லை. அங்கேயும் த ங் கி யி ரு க் க எனக்கு மனமில்லை. மெட்ராசுக்குப் போனேன். என்ன ஊரு அது சே! ரொம்பப் பெரிசா இருந்துட்டாப்போதுமா? கட்டிடங்கள் மாடிக்கு மேலே மாடி வச்ச கட்டிடங்கள், அகலம் அகலமான ரோடுகள், ஏகப்பட்ட ஒட்டல்கள் சினிமாத் தியேட்டர்கள், எங்கே பார்த்தாலும் கடைகள் கடைகள்- கடைகள்னு இருந்துட்டால் போதுமா? எப்ப பார்த்த லும் கூட்டம். எங்கேயும் கும்பல், நெருக்கடி பரபரப்பு, எதுக்காக மனுசங்க இப்படி இடிச்சு நெருக்கிக்கிட்டு, அவசரமும் பரபரப்புமா வாழனுமின்னு எனக்குப் புரியலே அமைதி வேண்டாமா? அப்புறம் ஆனந்தம் எங்கேயிருந்து கிட்டும்? பெரிய ஊருதான், நிம்மதியா, செளகரியமா, குளிக்க வசதி உண்டா? ஏதோ குளிக்கிறோம்னு பேர் பண்றதுக்காக, ஒரு வாளித் தண்ணியிலே உடம்பைக் கழுவிக்கிட்டு... சேச்சே, எனக்கு அது பிடிக்கவேயில்லே, என்னென்னமோ தட புடலாப் பேருகளை வச்சிருக்காங்க. எந்த ஒட்டலிலே போய் தின்னாலும், ரூபாய்தான் பறக்குதே தவிர, வயிறு முட்டச் சாப்பிட முடியலே. சாப்பிட்டோம்கிற திருப்தியும் ஏற்பட மாட்டேன் குது. நம்ம வீட்டிலே பழையச் சோறும், சுண்டல்கறியும் சாப்பிட்டால் ஏற்படுகிற குளுமையும் திருப்தியும் இந்த மூணு நாளிலே எந்தப் பெரிய ஓட்டலிலும் எனக்கு ஏற்படவே இல்லே. அதுதான் பார்த்தேன். நமக்கு, மதுரையும் சரிப்படாது, மதராசும் ஒத்துவராது; நம்ம இன ரு க் கே போயிட வேண்டியதுதான்னு உடனேயே ரயில் ஏறி விட்டேன். சே, என்ன கூட்டம், என்ன நெருக்கடி அர்த்தமில்லாத அவசரம் செச்சே, எனக்கு எதுவுமே பிடிக்கலே’ என்றார்.
சொக்கய்யா ஆற்றுக்குப் போய் சுகமாகத் தண்ணீரில் குளிரக் குளிர மூழ்கிக் களித்தார். "ஆ, இந்த சுகத்துக்கு எதுதான் ஈடாகும்? இப்படிக் குளிப்பதே சந்தோஷமா இருக்குதே!" என்று அந்த இன்பத்தில் லயித்துமிதந்தார். பிறகு அடிக்கடி தனது எண்ணங் களை ஒலிபரப்ப அவர் தயங்கவில்லை.
"ஆற்றுத் தண்ணீரில் ஆனந்தமாகக் குளிப்பது ஒரு சுகம். அமைதி திறைந்த சூழ்நிலையில்:அவசரம் எதுவும் இல்லாமல் தன் காசியங்களைச் செய்து கொண்டிருப்பதில் ஒரு சந்தோஷம், நிம்மதியாய் தூங்குவது ஒரு சுக அனுபவம். இதுமாதிரி, வாழ்க்கையிலே சந்தோஷங்களுக்குக் குறைச்சலே இல்லை. மனுசங்கதான் இதை உணர்ந்து அனுபவிக்கத் தவறிடுறாங்க." சிவபுரம் கிராமத்தில் உள்ளவர்களுக்குக் கூட அவர் பேச்சு பிடிக்கவில்லை. நாகரிக நகரவாசிகள் அவருடைய கருத்துக்களை ஒத்துக்கொள்வார்களா என்ன?
"சுத்தப் பைத்தியக்கார மனுஷன்! ஒவ்வொருத்தன் மெட்ராசுக்குப் போகனும் லிட்டியை சுத்திப் பார்க்கணும்னு தவியாய் தவிச்சுக் திட்டிருக்கான். அங்கேயே வசிக்கனும்னு எத்தனையோ பேரு பறவாப் பறக்கிறாங்க. இவரு என்ன டான்னா... ஹஹ" என்று சிரிப்பிலே பேச்சை முடிப்பது ஊரார்களது வழக்கமாயிற்று. மற்றவர்களின் நற்சான்று பெற வேண்டும் என்று சொக்கய்யா என்றுமே ஆசைப்பட்டவர் இல்லைதான்.
★ தீபம்-அக்டோபர்-1375