பக்கம்:பிள்ளைக்கலி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 2 'குழந்தை துருதுருவென்று வருகிறதே! பள்ளிக்கூடத் திற்காவது அனுப்பக்கூடாதா' என்ருர் நண்பர். "ஆமாம் சார், தொந்தரவு சகிக்கலே. அங்கேதான் கொண்டு தள்ளணும். வயது கொஞ்சம் ஆகட்டுமே என்று பார்க்கிறேன்' என்ருர் முருகதாசர், விளக்குத் திரியை உயர்த் திக்கொண்டே. 'நேத்து பீச்சுக்குப் போயிருந்தேன்! சுந்தரத்தைப் பார்த் தேன்”.... என்று ஆரம்பித்தார் சுப்பிரமணிய பிள்ளை. 'அந்த ராஸ்கல் வந்துட்டான! என்றைக்கும் அவன் தொல்லைதான் பெரிய தொல்லையாக இருக்கிறது. இங்கே வந் தான்ன ஆபீசுக்கு வந்து யாருக்காவது வத்தி வச்சுட்டுப் போயி பரிது. . . . . . . . மின்னே வந்தப்போ என்ன எழவு சொன்னனே, அந்த ஆர்ட்டிஸ்ட் பதி இருந்தர்னே, அவனுக்குச் சீட்டுக் கொடுக்க வழி பண்ணிட்டான்........ ’’ என்று படபடவென்று பேசிக்கொண்டே போளுர் முருகதாசர். 'அப்படிப் பார்த்தா உலகத்திலேயே யார்தான் affrr:நல்லவன்! அவன் உங்களைப் பத்தி ரொம்பப் பிரமாதமாக அல்லவா கண்ட இடத்திலெல்லாம் பு க ழ் ந் து கொண் டிருக்கிருன்?’’ 'சவத்தெத் தள்ளுங்க, சார்! பேன் பார்த்தாலும் பார்க்கும், காதை அறுத்தாலும் அறுக்கும். அவன் சங்காத்தமே நமக்கு வேண்டாம்........... நீங்க என்ன சொல்ல வாயெடுத் தீர்கள்? : 'அதுதான், உங்களெப் பத்தித்தான் ஒரு இங்கிலீஷ்கார னிடம் பிரமாதமாகப் பேசிக்கொண்டிருந்தான்...' 'இவ்வளவுதான? கதையை எழுதரேன் அல்லது கத்திரிக் காயை அறுக்கிறேன், இவனுக்கென்ன...... و به و அதே சமயத்தில் வெளியிலிருந்து, 'முருகதாஸ்! முருக தாஸ்!' என்று யாரோ கூப்பிட்டார்கள். 'அதுதான்! - அவன்தான் வந்திருக்கிருன் போலிருக்கிறது! பயலுக்கு நூறு வயசு..... ... '" 'சைத்தான் நினைக்கு முன்னல் வந்து நிற்பான், என்பது தான்!” என்று முணுமுணுத்தார் முருகதாசர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/10&oldid=1395626" இலிருந்து மீள்விக்கப்பட்டது