உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைக்கலி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 46 கிழவன் பேச்சை ஆரம்பிக்கும் முன்னதாகவே, மேரியே அந்தப் பேச்சை ஆரம்பித்தாள். 'அடுத்ததாக மகளுக்குக் கல்யாணத்தைச் செய்து வைத்து விட்டால் உன் கடமை தீர்ந்து போகும் இல்லையா சுடலை ? . என்று கேட்டாள் மேரியம்மாள். கிழவனுக்கு மெய் சிலிர்த்தது. 'அதைத்தாங்க - நானும் இந்த ஒரு மாச காலமாக நினைச்சுக்கிட்டே இருக்கேன்' என்ருன் கிழவன். இதைப் பற்றியே வெகு நேரம் வரையிலும் மேரியம்மா ளோடு பேசிக் கொண்டிருந்தான் கிழவன். அந்த அம்மாள், புரட்சி சமுதாய அமைப்பைப் பற்றிக் கூறினுள். அது, அவனுக்குப் புரியவில்லை. கல்யாணப் பேச்சிலே ஆரம்பித்து, இதையெல்லாம் ஏன் பேச வேண்டும் ? உள்ளே ஏதோ இருக்கிறது. மேரியம்மாள் வெளிப்படையாகச் சொல்லவில்லை. அன்றிரவே மகளிடம் கேட்டான் கிழவன். ஆரம்பத்தில் மெளனமாக நின்ருள். கிழவன், மேலும் அழுத்தமாகக் கேட்ட போது அழுதுவிட்டாள். தலை கவிழ்ந்தவள் நிமிரவேயில்லை. இருதயத்திலே அம்மியை ஏற்றி வைத்தது போலிருந்தது கிழவனுக்கு. ஒன்றும் புரியாமலே அங்கேயே தங்கிவிட்டான். இரண்டு நாட்களுக்குள்ளாகவே, அந்தப் பேச்சு, மெல்ல மெல்ல அவனது காதுகளில் விழுந்தது. மேலும் விசாரித்தான். செல்லம்மாள் மனத்திலே - நினைத்திருப்பவன், உள்ளூரிலேயே வாத்தியாராக இருக்கிருளும். 'அவன் உயர்ந்த சாதிக்காரன்' என்பதையும் குறிப்பாகக் கேட்டுத் தெரிந்துகொண்டான் கிழவன். மகளிடமே கேட்டான். அவளும் தெளிவடைந்திருந்தாள். குறிப்பாகத் தலையசைத் தாள். வாய் திறந்தும் சொன்னுள், அவனைத்தான் மணப்பதாக. கிழவனுக்கும் மகள்மீது முதல் தடவையாகக் கோபம் வந்தது. 'உன்னேட நிலையையும் நல்லாப் புரிஞ்சுக்கணும். நீ சுடலை காப்பவன் பெத்த பிள்ளை' என்று, தடுமாற்றத்தோடு சொன்னுன் கிழவன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/144&oldid=1395763" இலிருந்து மீள்விக்கப்பட்டது