உள்ளடக்கத்துக்குச் செல்

அசோகனுடைய சாஸனங்கள்/அசோக எழுத்து

விக்கிமூலம் இலிருந்து

VI. அசோக எழுத்து

அசோகன் காலத்தில் உபயோகிக்கப்பட்ட லிபி 
இருவித புராதன
லிபிகள்

இருவகைப்படும். (i) பெரும்பாலான இந்திய பாஷைகளைப்போல் இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்துக்கு எழுதப்படும் ப்ராம்மி லிபி. (ii) மற்றொன்று ஹிந்துஸ்தானியைப்போல வலது பக்கத்திலிருந்து இடது பக்கத்துக்கு எழுதப்படும் கரோஷ்டி லிபி. ப்ராம்மி லிபியை இந்தியாவிலுள்ள எழுத்துக்களுக்கெல்லாம் தாய் என்று சொல்லலாம். பெரும்பாலான அசோக சாஸனங்கள் இந்த லிபியிலேயே எழுதப்பட்டிருக்கிறது. அசோக சாஸனங்களிற் காணப்படும் இவ்விருவகை லிபிகளை விடப் புராதனமான லிபிகள் இந்தியாவில் இல்லையென்று சொல்லலாம்.

இந்தியாவிலுள்ள பாஷைகளுக்கு வெவ்வேறு லிபி தற்காலத்தில் ஏற்பட்டிருந்தாலும் இந்த லிபிகள் அசோக சாஸனங்களிலுள்ள ப்ராம்மி லிபியிலிருந்து

ஸார்நாத் ஸ்தம்பத்தின் சிகரம்

உற்பத்தியானவையே. இவ்வுண்மை இந்த லிபிகள் 
ப்ராம்மி லிபி
இந்திய எழுத்துக்
களுக்கு மூலா
தாரம்
எல்லாவற்றையும் தாரதம்மியப்படுத்திப் படிக்கும் பக்ஷத்தில் எளிதில் விளங்கும், முலா எழுத்தின் வடிவம் எழுதுவதற்கு

உபயோகிக்கப்படும் ஸாதனங்களுக்குத் தக்கபடியும் கருவிகளுக்குத் தக்கபடியும் லேககன் சரீர ஸ்திதிக்குத் தக்கபடியும் மாறுதல் அடைகின்றன. இக் காரணங்களால் எழுத்தின் வடிவம் காலதேசங்களை அனுஸரித்துப் பல மாறுதல்கள் அடைவதை நாம் சாஸன ஆராய்ச்சி மூலமாய் அறிந்துகொள்ளலாம். அசோகன் காலத்துக்கு நூறு வருஷங்களுக்குப்பின் ப்ராம்மி லிபியில் செங்குத்தான கோடுகள் மாறி வட்டங்களும் வளைவுகளும் ஏற்பட்டன. உதாரணமாக பட்டிப்ரோலு லிகிதத்தில் [1] இப்படிப்பட்ட வளைவுகளை நாம் அதிகமாய்க் காண்கிறோம், தமிழ், தெலுங்கு, கிரந்தம், மலையாளம், கன்னடம் என்ற தென்மொழிகளின் எழுத்துக்கள் ௸ லிகிதத்தில் காணப்படும் லிபியிலிருந்து உற்பத்தியானவை என்பதை தென் இந்தியாவில் வசிக்கும் நாம் கவனிக்கலாம்.

இந்தியாவின் பாஷைகள் அநேக ஆயிர வருஷங்களாக 
இந்திய பாஷைக
களுக்கு லிபி ஏற்
பட்ட விதம்

ஒருவித லிபியும் ஏற்படாமல் விர்த்தியடைந்து வந்தன. எல்லாவித கிரந்தங்களையும் சந்தை சொல்லி மனப்பாடம் செய்யும் வழக்கத்தால் இந்திய ஜனங்களுக்குத் தங்கள் பாஷையை எழுதுவதற்கு லிபி அவசியமில்லாமலிருந்தது. அப்படியாயின் இந்தியபாஷை களுக்கு எப்போது லிபி ஏற்பட்டது? இந்தக் கேள்விக்கு ஸ்ரீபுலர் என்ற புராதன வஸ்து சாஸ்திரியின் விடை பின்வருமாறு: சுமார் கி.மு. எட்டாம் நூற்றண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கும், அதன் மேற்கிலுள்ள யூதரைப் போன்ற ஜாதியாருக்கும் வியாபார விஷபமாய்க் கடல் யாத்திரையும் சாமான்களின் போக்குவரவும் முன்னிலும் அதிகமாய் ஏற்பட்டன. இச்சாதியாரிடமிருந்தே இந்திய ஜனங்கள் எழுதும் வித்தையைக் கற்றுக்கொண்டனர். ஏனென்றால், இவர் எழுதிவந்த லிபியிலும் ப்ராம்மி லிபியிலும் சில எழுத்துக்கள் வடிவிலும் உச்சரிப்பிலும் ஒத்திருக்கின்றன.

ஆனால் ப்ராம்மியி லுள்ள எல்லா எழுத்துக்களும் கடனாகக் கிடைத்தவை யல்லவென்று ஸ்ரீபூலரும் ஒப்புக் கொள்ளுகிறார். இந்தியர் தங்களிடமிருந்த புது உச்சரிப்புக்கு அவசியமான குறிகளைத் தாமே ஏற்படுத்திக் கொண்டனர். வியாபாரிகள் தாம் கற்ற புது வித்தையை முதலில் ஞாபகக் குறிப்புகளுக்கு உபயோகப்படுத்தினார்கள். பனையோலையும் பூர்ஜபத்திரமும் செம்பு போன்ற லோகத்தகடுகளும் இந்நாட்டில் எழுதுவதற்கு ஸாதனங்களாயின. லிபி வழக்கத்தில் வந்த பிறகும் மதக் கிரந்தங்களை இப்படிப்பட்ட ஸாதனங்களில் எழுதிவைப்பதற்கு வேதியர் துணியவில்லை. காலக்கிரமத்தில் மதசம்பந்தமான கிரந்தங்களும் எழுதப்பட்டு மனிதன் ஞாபகசக்திக்கு ஏற்பட்டிருந்த அனாவசியமான பாரத்தை கொஞ்சங்கொஞ்சமாய் ஜனங்கள் குறைத்துக்கொண்டனர்.

கரோஷ்டி லிபி யூதஜாதியாரிடமிருந்து கிடைத்ததன்று. 
கரோஷ்டி லிபி

கி. மு. ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவின் வடமேற்கிலுள்ள பிரதேசங்கள் பெர்ஸியா தேசத்தாரின் ஆதீனத்திலிருந்தன. இந்தப் பிரதேசங்களில் ஆர்மேயிக் என்ற பெர்ஸியாதேசத்து லிபி பரவிற்று, கரோஷ்டி இந்த லிபியிலிருந்து உற்பத்தியானது. கரோஷ்டி லிபி அசோகன் காலத்திலும் அதற்குப்பின் சில நூற்றாண்டுகள் வரையும் பஞ்சாபிலும் வடமேற்கு மாகாணத்திலும், ஸிந்துதேசத்திலும் பரவியிருந்தபோதிலும் கடைசியில் இந்தியாவிலும் அதன் புறமும் முற்றிலும் மறைந்து போயிற்று. மத்திய ஆசியாவிலுள்ள கோட்டான் ஒரு காலத்தில் வளமையும் நாகரிகமும் தழைத்த தேசமாயிருந்ததென்று முன்னே கூறினோம். கரோஷ்டி, லிபியில் எழுதப்பட்ட பௌத்தமதக் கிரந்தங்களும் மற்றக் கிரந்தங்களும் இத்தேசத்திலிருந்து சமீப காலத்தில் புதையலாய் அகப்பட்டிருக்கின்றன. இவை உலகத்துக்கு மிகவும் அருமையான செல்வமென்று வித்வான்களால் மதிக்கப்படுகின்றன.

குறிப்புகள்

[தொகு]
  1. 🞸 பட்டிப்ரோலு கிருஷ்ணா நதியின் முகத்தில் குண்டூர் ஜில்லாவிலுள்ள ஊர். பட்டிப்ரோலு லிகிதம் Epigraphia Indica, Vol. II. பக்கம் 323-ல் கண்டுகொள்ளவும், இதன் காலம் கி. பி. 200.