இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காலை நேரம். இராமேசுவரம் கோயில் மேலசவாசல் பகுதியில் உள்ள சத்திரம் முகப்பில் உள்ள பெரிய அறையில் சேதுபதி மன்னரது பிரதானி இருக்கையில் அமர்ந்து ஒலை ஒன்றைப் படித்துக் கொண்டு இருந்தார். திருக்கோயில் பூஜையில் கலந்து கொண்டு பி ர ச_ா த ங் க ளு ட ன் அரண்மைைனக்கு சென்று கொண்டிருந்த அரண்மனை கார்வார் சத்திரத்திற்குள் நுழைந்தார்.