அலெக்சாந்தரும் அசோகரும்/கட்டுரைப் பயிற்சி
கட்டுரைப் பயிற்சி
கட்டுரைகளுகளும் நினைவுக் குறிப்புக்களும்
1. மகத நாட்டின் பெருமைகள்:
(1) முன்னுரை, (2) பழந்தமிழ்நூல் குறிப்பு, (3) கல்விச் சிறப்பு, (4) கட்டடப் பெருமை, (5) புகழ் பெற்ற பெரியோர்கள் வாழ்ந்தமை, (6) நாலந்தாப் பல்கலைக் கழகம், (7) பாடலி புத்திரம், (8) கோட்டை கொத்தளங்கள், (9) நகராண்மைக் கழகம், (10) முடிவுரை.
2. யவனர் வாழ்க்கை:
(1) முன்னுரை, (2) கிரீஸ் நாட்டின் கலை, நாகரிகச் சிறப்பு, (3) ஸ்பார்ட்டா மக்களின் வாழ்க்கை நிலை, (4) அதீனிய மக்களின் வாழ்க்கை நிலை, (5) ஸ்பார்ட்டாவுக்கும் ஏதன்ஸ்ஸுக்கும் நடந்த போர்கள், (6) முடிவுரை.
3. அலெக்சாந்தரின் இளமைப் பருவம்:
(1) முன்னுரைர, (2) பிலிப் மன்னனின் பெருமை, (3) அலெக்சாந்தர் தோற்றமும் ஆர்வமும், (4) குதிரையை அடக்கிய சிறப்பு, (5) பெருமித உணர்ச்சி, (6) அரிஸ்டாட்டில், (7) போர்க் காவியத்தில் விருப்பம், (8) இருபதாம் வயதில் அரியணை ஏறுதல், (9) முடிவுரை.
4. அலெக்சாந்தரின் வெற்றிகள்:
(1) முன்னுரை, (2) கலகக்காரர்களை அடக்குதல், (3) பாரசீக நாட்டின்மீது படையெடுத்தல், (4) தரியஸ் மன்னனின் வீழ்ச்சி, (5) ஆப்கானிஸ்தானத்தை வெல்லுதல், (6) இந்திய நகரங்களைக் கைப்பற்றுதல், (7) முடிவுரை.
5. அலெக்சாந்தரும் போரஸ் மன்னரும்:
(1) முன்னுரை, (2) அலெக்சாந்தரின் படையெடுப்பும் அம்பி சரணடைதலும், (3) போரஸ் எதிர்ப்பு , (4) ஜீலம் நதிக்கரையில் போர், (5) படைகளின் அணி வகுப்பு, (6) யானைப் படையின் நிலை, (7) போரஸ் வீழ்ச்சி, (8) போரஸின் பெருமிதம், (9) முடிவுரை.
6. சந்திர குப்தர் பேரரசை அமைத்தல்:
(1) முன்னுரை, (2) அலெக்சாந்தர் படையெடுப்பின் விளைவுகள், (3) சந்திர குப்தரும் செலியூகஸும், (4) சாணக்கியர் உதவி, (5) கலிங்க வெற்றி, (6) முடிவுரை.
7. சந்திர குப்தரின் அரசியல்:
(1) முன்னுரை, (2) பாடலி புத்திரம், (3) பல வகைப் பணிகள், (4) வாணிகம், (5) அர்த்த சாத்திரம், (6) முடிவுரை.
8. அசோகரின் பெருமைகள்:
(1) முன்னுரை, (2) எச். ஜி வெல்ஸ் கூற்று , (3) பரந்த மனப்பான்மை, (4) சிறுவயதிலேயே அரியணையேறுதல், (5) பௌத்த சமயத்தைப் பின்பற்றியமை, (6) பெற்ற வெற்றிகள், (7) முடிவுரை.
9. அசோகரும் கலிங்கப் போரும்:
(1) முன்னுரை, (2) கலிங்கத்தின் நிலைமை, (3) போர் நிகழ்ச்சிகள், (4) கலிங்கத்துப்பரணி நினைவூட்டும் காட்சிகள், (5) அசோகரின் மனமாற்றம், (6) முடிவுரை.
10. பேரரசரின் சின்னங்கள்:
(1) முன்னுரை, (2) புத்தர் பெருமானிடம் ஈடுபாடு, (3) விகாரங்கள், (4) தூண்கள், (5) பாழடைந்த சின்னங்கள், (6) கல்வெட்டுச் செய்திகள், (7) முடிவுரை.
11. அசோகரின் ஆட்சிமுறையும் மக்கள் வாழ்க்கையும்:
(1) முன்னுரை, (2) அரசியல் அதிகாரிகளும் அவர்தம் கடமைகளும், (3) தண்டனைகள், (4) பலவகைப் படைகள், (5) சாலைகள் அமைத்தல், (6) வாணிகம் (7) முடிவுரை.
12 அசோகரின் அருங்குணங்கள்:
(1) முன்னுரை, (2) வள்ளுவர் நெறியில் வாழ்ந்தவர், (3) காட்சிக் கெளியர், (4) உயிர்களிடத்து அன்பு, (5) பிற சமயங்களிடத்து வெறுப்பு இல்லாமை, (6) பகைவருக்கும் அன்பு காட்டுதல், (7) முடிவுரை.