உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போருளதிகாரம் - பொருளியல் உாஅக கூசு. தாய்க்கு முரித்தாற் போக்குடன் கிளப்பின். என்-னின், நற்றாய்க் குரியதோர் மரபு உணர்த்திற்று, மேற்சொல்லப்பட்ட கனவு தாய்க்கும் உரித்து: உடன் போக்குக் கிளக்கப்பட்டுழி என்றவாறு. உதாரணம்:-- 'கண்படை, பெறேன் கனவ' (அகம் - ) . எனவரும், வேறும் வந்தவழிக்காண்க. கூஎ. பால்கெழு கிளவி நால்வர்க்கு முரித்தே நட்பினடக்கை யாங்கலங் கடையே. என்-னின், எய்தியதன் மேற் சிறப்புவிதி கூறுதனுதலிற்று. பால்கெழ காவி நால்வர்க்கு மூரித்து என்பது- பான்மை கெழுமப்பட்ட கிளவி பெண்பாலா ராகிய நால்வர்க்கும் உரித்தென்றவாறு, நால்வராவார்-- தலைவி, தோழி, நற்றாய், செவிலி. அஃதேல் தலைமகளை யொழிய மூவர் என்று அமையாதோ எனின், மேல் தீலைமகட்கும் உரித்தென்றார் அவரொடு கூட நால்வர் என வகையறுத்தல் என்பது. நட்பி வடகீதை யாங்கலங் கடையே என்பது --நட்பின் வழங்கும் வழக்கல் தைவிடத்து என்றவாறு. அஃதாவது, தலைவியொடு தோழி யொழுகும் ஒழுக்கம் அவ் வழி யல்லாதவிடத் தென் றவாறு, 2 அவண்மாட்டு நிகழ்வது தலைவன் தோழிக்குணர்த்தாது பிரிந் தவழி என்று கொள்ளப்படும். பாற்கிளவி என்பது பயிலாது வரும் ஒருகூற்றுச்சொல் எனப்பட்டது. அதனைக் செழு:சிய சொல் பால் கெழு கிள்வி யாயிற்று. ஆண்டு நற்றாய் கூறியதற்குச் செய்யுள் :- கருமணற் கிடந்த பாலையென் மருமக ளேயென முயங்கின எழுமே.” (அகம் - ஈசுஈ) செவிலி கூறிய தற்குச் செய்யுள்:-- தான் சுயாக் கோங்கர் தளரா முலைகொடுப்ப லீன்றாய் நீ பாலை யிருங்குரவே - யீன்றாள் மொழிகாட்டா யாயினு முள்ளெயிற்றாள் சென்ற வழிகாட்டாய் நீயெனக்கு வந்து.” (திணைமாலை - சுரு] தோழி கூறியதற்குச் செய்யுள் வந்தவழ்க்காண்க பாகூ அ. உயிரு நாணு மடனு மென்றிவை .. செயிர்தீர் சிறப்பி னால்வர்க்கு மரிய. என்-னின், மேற்சொல்லப்பட்ட நால்வர்க்கு முரியதோர் பொருண்மை யுணர்த் திற்று, உயிரும் நானும் மடப்பமும் என்று சொல்லப்பட்டவை குற்றந் தீர்த்த சிறப்பினை புடைய தலைமகட்கும் தோழிக்கும் நற்றாய்க்கும் செவிலிக்கும் உரிய வென்ற மறவாறு. (பிரதி)--1. யெண்பாலா. 2. அவன் 37: