8
வங்காளத்தில் கோவிந்தநாத குகன் என்பவர் வால்மீகி ராமாயணத்தை நாம் கம்பராமாயணத்தைச் சுருக்க நினைத்தவண்ணமே சுருக்கி 3000 சுலோகங்களுக்குள் அடக்கி லகு ராமாயணம் என்று பேர் வைத்துப் போட்டிருக்கிற பதிப்பும் வெளிவந்தது. இதையும் கவனித்து, நாம் செய்ய முயற்சிப்பதும் முறைத் தவறன்று என்று கற்றோர் கொள்ளுவார்கள் என நம்பி இந்தச் சுருக்கப் பதிப்பை வெளியிட நிச்சயித்தோம்.
இந்தப் புத்தகத்தில் பால காண்டத்தை மாத்திரம் சுருக்கி, பொருள் தெள்ளிதில் விளங்கும்படி பதங்களைப் பிரித்து எழுதியதோடு, கவிகளை முற்றிலும் அறிந்து கொள்ளுவதற்கு வேண்டிய விவரங்களைக் கடைசியில் குறிப்புகளாக எழுதியும், ஒரு அருஞ் சொல் விளக்கம் அகராதியாகத் தொகுத்தும் இருக்கிறோம், இந்தப் பாலகாண்டம் கற்றோர்களுக்கும், கற்போர்களுக்கும் விருப்பம் தருகிறது என்று கண்டால் நாம் தயாரித்து
கற்பிக்கும்போதும், தமக்கும் கேட்போர்க்கும் பொருள் வினங்கி, இவர் கற்றவர் தாம் என்று கேட்டோர் தம்மை மதிக்கும்படியாய், எப்படி சந்தியையும் விகாரத்தையும் விலக்கி பதங்களைப் பிரித்துப் படிப்பாரோ, அப்படியே பிரித்து அச்சிற் பதிக்கப்பட்டிருக்கிறது ......"
இவர் பிரித்திருக்கிற மாதிரி பின் வருமாறு:
வெயில் இள நிலவே போல் விரிகதிர் இடைவீச
பயில் மரம் நிழல் ஈனப்பனி புரை துளிமேகப்
புயல் தர இளமென் கால்பூ அளவிய தெய்த
மயில் இனம் நடம் ஆடும் வழி இனியன போனார்.
அயோத்தியா காண்டம்— வனம்புகு படலம்.
தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத்
தீய்வினை என்ன நீத்துச்சித்தனை முகத்திற்றேக்கிப்
போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின்கேள் ஆவரோதெரியின் அம்மா.
அயோத்தியா காண்டம் குகப்படலம்.
</ref>