உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கனிச்சாறு 1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  33

17  முந்துற்றோம் யாண்டும்!

செந்தமிழே! உள்ளுயிரே;
செப்பரிய நின்பெருமை
எந்தமிழ்நா எவ்வா
றெடுத்தே உரைவிரிக்கும்?
முந்தைத் தனிப்புகழும்
முகிழ்த்த இலக்கியமும்
விந்தை ‘ நெடுநிலைப்பும்
வேறார் புகழுரையும்
உந்தி உணர்வெழுப்ப
வுள்ளக் கனல்மூளச்
செந்தா மரைத்தேனைக்
குடித்துச் சிறகார்ந்த
அந்தும்பி பாடும்
அதுபோல யாம்பாடி
முந்துற்றோம் யாண்டும்
முழங்கத் தனித்தமிழே!

-1960

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/60&oldid=1419377" இலிருந்து மீள்விக்கப்பட்டது